இன்றைய காலத்தில் பணம் என்ற காகிதம் கையில் இல்லாமல் ஒரு நாளும் வாழ முடியாது என்கிற நிலையில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணம் இல்லாமல் வாழ முடியாதா என்ற கேள்விகள் எழலாம். ஆனால் பணம் இல்லாமல் வாழவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆகையால் தான் இன்றைய சூழலில் பணத்தின் தேவை அதிகரித்து அதன் பின்னால் மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பணம் தாராளமாக நம் கையில் புழங்க வேண்டும் என்றால் நாம் இரவும் பகலும் அயராது பாடு பட வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் சேமிக்க வேண்டும். என்பதெல்லாம் இருந்தாலும் இந்த பணமானது நம்மிடம் தங்கவும் அதிகமாக வந்து சேரவும் ஒரு கூட யோகம் வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது பணம் வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பணவரவு அதிகரிக்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்ய ஏழு கிராம்பு வேண்டும். இந்த கிராம்புடைய தலைப்பகுதி கொஞ்சம் கூட உடையாமல் நன்றாக இருக்க வேண்டும். அதே போல் 7 துண்டு பச்சை கற்பூரம், 7 ஏலக்காய் இதுவும் நிறம் மாறாமல் பச்சையாக இருக்க வேண்டும். அடுத்து ஏழு பிரியாணி இலை. இவை எல்லாம் வைத்து முடிச்சாக கட்ட ஒரு மஞ்சள் நிற துண்டு இதையெல்லாம் பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் துவங்கி கொள்ளலாம். பரிகாரம் செய்ய வேண்டிய நாளன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு பிரம்ம முகூர்த்த வேளையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த பொருட்களை எல்லாம் இந்த மஞ்சள் நிற துணியில் வைத்து மஞ்சள் நிற நூலால் ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.
இந்த முடிச்சை தாயாரின் படத்திற்கு முன்னால் வைத்து உங்களுக்கு பணவரவு தாராளமாக கிடைக்க வேண்டும் என்றும், வந்த படம் நல்ல வழியில் செலவழிந்து பல மடங்காக பெருக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். வியாபாரம் செய்பவர்கள் தொழில் ஸ்தானத்தில் இதை வைத்து விடலாம்.
இந்த முடிச்சில் உள்ள பொருட்களில் மணம் குறைய தொடங்கும் போது இதை எடுத்து போட்டு விட்டு வேறு புதிய முடிச்சு தயார் செய்து மறுபடியும் தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து வணங்கி அதன் பிறகு நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் எப்போதும் போல வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: பெண்கள் மீது இந்த 3 வாசனைகள் வீசவே கூடாது தெரியுமா? அது என்ன வாசனை?
இந்த முடிச்சு பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு பணவரவு அதிகரித்து கையில் தாராளமான பணப்புழக்கம் இருப்பதோடு, பணம் வீண் விரயம் ஆகாமல் நல்ல செலவுகளாக ஆகும். அது மட்டும் இன்றி பணம் பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கவும் இதில் இதில் உள்ள பண ஆகர்சன பொருட்கள் உதவி புரியும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து தாயாரின் அனுகிரத்தை பெற்று நல்ல பணவரவுடன் வாழலாம் என்று கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.