பெண்கள் மீது இந்த 3 வாசனைகள் வீசவே கூடாது தெரியுமா? அது என்ன வாசனை?

veppilai-homely-girl
- Advertisement -

பெண்களாக பிறந்தவர்கள் மீது இந்த மூன்று வாசனைகள் வீசக்கூடாது என்று சாமுத்திரிகா லட்சணம் சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றது. சாமுத்திரிகா லட்சணம் பெண்ணின் அங்கம் மற்றும் குண அமைப்பைக் கொண்டு பலன்கள் குறிப்பிடுகிறது. லட்சணமான முகம் என்று சிலரை குறிப்பிடுவதை பார்த்திருப்போம். இந்த லட்சணத்தை கொண்டு குறிப்பிடப்படும் பலன்கள் சாமுத்திரிகா சாஸ்திரம் ஆகும். இந்த சாஸ்திரத்தின் அடிப்படையில் பெண்களின் மீது வீச கூடாத வாசனைகள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லா சாஸ்திரங்களும் பெண்ணுக்கு தனித்துவமான பலன்களை எடுத்துரைப்பதன் மூலமாகவே பெண் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறாள்? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெண் இல்லை என்றால் அந்த குடும்பமே சிதறி போவதற்கு வாய்ப்புகள் அதிகம். என்னதான் ஆண் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், பெண்ணே அந்த சம்பாத்தியத்தில் குடும்பத்தை சரியாக திட்டமிட்டு நடத்துகிறாள். எனவே பெண்ணே அங்கு அரசாட்சி புரிவதாக இருக்கிறது.

- Advertisement -

புனிதமான பெண் குலத்தில் பிறந்தவர்கள் தன் பிறப்பை எண்ணி எப்பொழுதும் வருந்தக் கூடாது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. கர்ம அடிப்படையில் வினைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும். நாம் அதற்காகத்தான் நல்லவைகளை நினைத்து, நல்லவைகளை செய்ய வேண்டும் என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் பலரும் கூறுகின்றனர். நம் எண்ணத்திற்கு ஏற்பவே பலன்களும் இருக்கின்றது. நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து விடுங்கள். அதுவாகவே உங்களுக்கு நற்பலன்களை எங்கிருந்தாவது தேடிக் கொண்டு வந்து தரும். பெண்கள் மீது துர்நாற்றம் வீசக்கூடாது அதனால் எப்பொழுதும் பெண்கள் எந்த நிலைமையிலும் தினமும் குளிப்பதை தவிர்க்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

பெண்களின் மீது மாமிச வாசனை வீசக்கூடாது. புனிதமான பெண்கள் மாமிசத்தை சமைத்தாலும் கூட, அந்த மாமிச வாசனை தன் மீது வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு சுத்தமாக எதையும் சமைத்து பரிமாற வேண்டும். தன் உடையையும் எப்பொழுதும் மாமிச வாசம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக குளித்து முடித்துவிட்டு தான் சமைப்பார்கள் ஆனால் மாமிசம் சமைப்பவர்கள் சமைத்துவிட்டு குளித்து விடுவது தான் நல்லது.

- Advertisement -

மாமிச வாசம் வீசும் பெண்களின் கையில் லட்சுமி வாசம் குறையும் என்பது நியதி! ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சி’ என்பது பழமொழி. கொல்பவர்களுக்கே பாவம் வந்து சேரும், சாப்பிடுபவர்களுக்கு பாவம் வந்து சேராது என்று கூறுவார்கள். அது போல மாமிச வாசம் வீசுபவர்கள் மீது லக்ஷ்மி வாசம் குறையும் எனவே உடலையும், உடையையும் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பெண்களின் மீது கற்றாழை வாசனை வீசக்கூடாது என்று சாமுத்திரிகா லட்சண சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது. கற்றாழை தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு மூலிகை செடி ஆகும். இதிலிருந்து வடியும் மஞ்சள் நிற திரவம் ஒருவிதமான வாசனையை உண்டு பண்ணக்கூடியது. இது விஷத்தன்மை கொண்டது. எனவேதான் கற்றாழையை நன்கு நிறைய முறை தண்ணீர் ஊற்றி கழுவி பயன்படுத்துமாறு கூறப்படுகிறது. இந்த கற்றாழையின் வாசனை பெண்களின் மீது வீசக்கூடாது. இது சாமுத்திரிகா லட்சணத்தை குறைக்கும் என்று குறிப்பிடுகிறது.

இதையும் படிக்கலாமே:
வெள்ளி செவ்வாய்கிழமையில் மட்டும் இந்த தண்ணீரை உங்க வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். பணம் வரும் திசை தெரியாமல் அசுர வேகத்தில் உங்களை வந்தடைவது உறுதி.

‘வேம்பு’ அம்மனின் அம்சம் பொருந்திய ஒரு அற்புதமான மூலிகை மரமாகும். வேம்பு வாசம் வீடுகளில் நிறைந்திருப்பது நல்லது தான் என்றாலும், பெண்களின் மீது வேம்பு வாசம் வீசக்கூடாது என்றும் குறிப்பிடுகிறது சாமுத்திரிகா லட்சணம். வேம்பு வாசம் வீசும் பெண்களிடம் குலவிருத்தி தடைபடும். இது தெய்வீக வாசம் என்பதால் இவ்வாசம் பெண்களின் மீது எப்பொழுதும் வீசிக் கொண்டிருக்கக் கூடாது.

- Advertisement -