- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க கார்த்திகை மாத பரிகாரம்

பண வரவு அதிகரிக்க கார்த்திகை மாத பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் வசதி வாய்ப்புடன் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இந்த வசதி வாய்ப்பும் சுகமான வாழ்க்கையும் அனுபவிப்பதற்கு நமக்கு பணம் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அதனால்தான் இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் எந்த அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியுமோ, சேர்த்து வைக்க முடியுமோ அந்த அளவிற்கு பணத்தை சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு புறம் இருக்க மற்றொருபுறமோ தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பண வசதி கூட இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் அவர்களுடைய பணவரவு அதிகரிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் கார்த்திகை மாதத்திற்குள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கார்த்திகை மாத பரிகாரம்

கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டிற்குரிய மாதம் என்றும் விரதம் இருப்பதற்குரிய மாதம் என்றும் தீபம் ஏற்றதற்குரிய மாதம் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் நாம் நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், சிவபெருமான், முருகன், விநாயகர், ஐயப்பன், பெருமாள் என்று பல தெய்வங்களை வழிபடுவதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகளோடு சேர்த்து லட்சுமி குபேரரையும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் பணத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.

- Advertisement -

லட்சுமி குபேரரின் அருளை பெறுவதற்கு சில பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் ஒன்றாக தான் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரமும் திகழ்கிறது. இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதுவும் கார்த்திகை மாதம் முடிவதற்குள் செய்து விட வேண்டும். இதற்கு நமக்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் இருந்தால் போதும். மேலும் இதனுடன் ஏதாவது ஒரு சில்லறை நாணயத்தை வைக்க வேண்டும். மகாலட்சுமி வீற்றிருக்கக்கூடிய 108 பொருட்களுள் வெந்தயமும் ஒன்று. பலரும் தங்களுடைய சேமிப்பு பணத்தை அன்றைய காலத்தில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய வெந்தயத்தில் வைத்திருந்தார்கள் என்றும் அவ்வாறு வைக்கும் பொழுது அவர்களுக்கு பணவரவு அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது.

பணத்தை ஈர்த்து பசை போல நம்மிடமே ஒட்ட வைக்க உதவக் கூடியது தான் வெந்தயம். மாலை 6:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் தங்களிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு முதலில் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அடுத்ததாக குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். பிறகு சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபாடு செய்துவிட்டு லட்சுமி குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இரவு 8:00 மணி வரை இது அப்படியே பூஜை அறையிலேயே இருக்கட்டும். எட்டு மணிக்கு மேல் வெள்ளை, பச்சை, மஞ்சள் இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் ஒரு துணியை எடுத்து அதில் இந்த வெந்தயம் மற்றும் நாணயத்தை போட்டு மூட்டையாக கட்டி எந்த இடத்தில் நீங்கள் பணம் வைத்து எடுத்து செலவு செய்கிறீர்களோ அந்த இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் லட்சுமி குபேரரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கப்பெறுவதோடு நம்மிடம் பணம் அதிக அளவில் சேர்வதோடு பணம் வீண் விரயம் ஆகாமல் தவிர்க்கப்படும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த மூட்டைக்கும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்கழி ஒன்றாம் தேதி இந்த மூட்டையை எடுத்து அதில் இருக்ககக்கூடிய ஒரு ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு வெந்தயத்தை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணத் தேவையை பூர்த்தி செய்யும் சங்கடஹர சதுர்த்தி

மிகவும் எளிமையான அதேசமயம் பணத்தை ஈர்க்கக்கூடிய அதிசக்தி வாய்ந்த வெந்தயத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்பவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும் பண வரவும் அதிகரிக்கும் பணவரவு சேமிப்பாக உயரும் வாய்ப்புகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்