பணவரவிற்காக தான் நாம் ஒவ்வொருவரும் பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எவ்வளவு உழைத்தாலும் ஒரு சிலரால் தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தை விட ஒரு சதவிகிதம் கூட அதிகமாக சம்பாதிக்க முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். இன்னும் சிலருக்கு தாங்கள் கஷ்டப்படதற்கு உரிய பலனை கூட பெற முடியாத நிலை உண்டாகும். இவை அனைத்திற்கும் காரணமாக திகழ்வது பணத்தடை தான். இந்த பணத்தடையை நீக்கிவிட்டாலே பணவரவில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். இந்த தடைகளை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவு அதிகரிக்க பரிகாரம்
பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். கடினமாக உழைத்தும் பணவரவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பவர்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். தெய்வ வழிபாட்டை செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் தான் பலாப்பலன் உண்டாகும். அதே சமயம் நாம் பரிகாரங்களை செய்யும்பொழுது அந்த பரிகாரங்களின் மூலமாக சற்று கூடுதலாகவே நல்ல பலனை பெற முடியும். அந்த வகையில் இந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய பண தடை நீங்குவதோடு பணவரவில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும்.
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். முடிந்த அளவிற்கு சுப ஹோரை பார்த்து செய்வது நல்ல பலனை தரும். அதே போல் கௌரி பஞ்சாங்கத்தையும் பார்த்து தனம், லாபம் போன்ற நேரங்களில் செய்யும் பொழுது நல்ல பலன் உண்டாகும். இதற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும். இவை மூன்றுமே ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய பொருட்கள் தான். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைப்பதற்கு ஒரு பச்சை நிற துணி வேண்டும்.
இந்த துணியை முதலிலேயே வாங்கி சுத்தம் செய்து அதை பன்னீர் ஊற்றி நன்றாக அலசி நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது சற்று வாசனை மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதால்தான் நாம் பன்னீரை ஊற்றுகிறோம். பன்னீர் இல்லை என்பவர்கள் அத்தர், ஜவ்வாது போன்ற ஏதாவது இருந்தாலும் அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து இதில் நாம் வைக்கக்கூடிய பொருட்கள் ஏலக்காய், சோம்பு மற்றும் பச்சை கற்பூரம். இதை மூன்றுமே பணவரவை அதிகரிக்க கூடிய தன்மை வாய்ந்ததாகவும் மகாலட்சுமிக்கு உரிய பொருட்களாகவும் திகழ்கிறது.
நான்கைந்து ஏலக்காயை எடுத்து பச்சை நிற துணியில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் அளவிற்கு சோம்பையும் வைத்து இதில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். கட்டியை இந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய கல்லாப்பெட்டியில் இதை வைக்க வேண்டும். தினமும் பூஜை செய்யும் பொழுது இந்த பச்சை நிற மூட்டைக்கும் சாம்பிராணி ஊதுபத்தி தூபம் காட்ட வேண்டும். இதை மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். பழைய பொருட்களை ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிய பொருட்களை வைப்பது நல்ல பலனை தரும். மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வைப்பது நல்ல பலனை தரும்.
இதையும் படிக்கலாமே: பொருளாதார முன்னேற்றம் உண்டாக பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழுமனதோடு யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுடைய பணவரவில் படிப்படியாக ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.