- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க வாராகி வழிபாடு

பண வரவு அதிகரிக்க வாராகி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோரிக்கை இருக்கும். அதிலும் குறிப்பாக பலருக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கும். காரணம் பணவரவு அதிகரித்தாலே அவர்களுடைய பல பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைத்துவிடும் என்பதுதான். மேலும் நினைத்தது நிறைவேற வேண்டும் என்றும் வேண்டுதல் பலிக்க வேண்டும் என்றும் பலரும் வேண்டுதல் வைப்பார்கள். இப்படிப்பட்ட வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு வாராகி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாராகி அம்மனுக்குரிய அற்புதமான ஆற்றல்கள் பலருக்கும் தெரியும். வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதியில் வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் எதிரிகளற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் கடன் பிரச்சினை தீரும் என்றும் பலன்களை கூறுவார்கள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை வழிபடும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் ஆரம்பிக்கலாம். ஆனால் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்ய வேண்டும். தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். பெண்கள் தீட்டு நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது. இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் இரண்டே இரண்டு தான்.

ஒன்று கல் உப்பு மற்றொன்று ஒரு சிறிய மண்சட்டி. காலையில் இந்த வழிபாட்டை செய்வதாக இருந்தால் தொடர்ந்து 11 நாட்களும் காலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். நேரத்தை தவற விடக்கூடாது. இந்த வழிபாட்டை உங்கள் வீட்டு பூஜை அறையிலும் செய்யலாம் அல்லது உங்கள் வீட்டு ஹாலிலும் செய்யலாம். வடகிழக்கு மூலையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வடகிழக்கு மூலையில் தீபம் ஏற்ற வசதி இல்லை என்பவர்கள் பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

புதிதாக வாங்கிய கல் உப்பு பாக்கெட்டை எடுத்து அதில் கைநிறைய கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்பை இரண்டு கைகளுக்கும் மாற்றி கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அந்த இரண்டு கைகளையும் வானத்தை பார்த்தவாறு வைத்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் கோரிக்கை என்னவோ அதை வாராகி அம்மனிடமும் மகாலட்சுமி தாயார் இடமும் குலதெய்வத்திடமும் கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு வாராகி அம்மனின் மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

- Advertisement -

ஓம் ஐம் க்லீம் சௌ சிவ சம்பூ வாராகி வா வா ஹீம் பட் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்துவிட்டு கையில் இருக்கக்கூடிய கல் உப்பை மண் சட்டியில் போட்டு மூடி வைத்து விடுங்கள். இந்த மண்சட்டி பூஜை அறையிலும் இருக்கலாம் வீட்டில் ஏதாவது ஒரு இடத்திலும் இருக்கலாம். தினமும் ஒரே நேரத்தில் இதே முறையில் வழிபாடு செய்து அந்த கல்லுப்பை எடுத்து மண் சட்டியில் போட்டு வர வேண்டும்.

தொடர்ந்து 11 நாட்கள் செய்து முடித்த பிறகு சுத்தமான ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து நாம் சேகரித்து வைத்திருக்கும் கல் உப்பை எடுத்து வந்து அதிலிருந்து ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை மட்டும் எடுத்து உங்களுடைய வேண்டுதலை மறுபடியும் மகாலட்சுமி, குலதெய்வம், வாராஹி அம்மன் என்று மூவரையும் நினைத்து கூற வேண்டும். பிறகு இந்த கல்லுப்பு அனைத்தையும் அந்த தண்ணீரில் போட்டு கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் என்ன வேண்டுதலை நினைத்து இந்த வழிபாட்டை செய்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும், பண வரவு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத அனைத்து பிரச்சினைகளும் தீர

பெரிதாக எந்த செலவும் இல்லாமல் எளிதில் செய்யக்கூடிய இந்த வழிபாட்டை குலதெய்வம், மகாலட்சுமி தாயார், வாராகி அம்மன் என்று இவர்கள் மூவரையும் மனதார நினைத்துக் கொண்டு செய்ய நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும்.

சற்று முன்