பண வசியம், பெண் வசியம் செய்யும் முறை பற்றி தெரியுமா ?

mahalakshmi-1

பஞ்சபூத தத்துவத்தாலான இம்மனித உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி தான் உண்டு. இயற்கை வகுத்த சில அடிப்படை நியதிகளை மீறி இம்மனித உடலால் செயலாற்ற முடியாது. ஆனால் மனிதனுக்கேயுரிய “மனம்” அப்படிப்பட்டதல்ல. அது இயற்கையின் நியதிகளையும், காலத்தையும் கடந்து நிற்பது. இப்படிப்பட்ட மனித மனதின் மகத்தான ஆற்றலை உணர்ந்த யோகிகளும், சித்தர்களும் அம்மனதை சரியான முறையில் பிரயோகிப்பதால் நாம் விரும்பும் அனைத்தையும் பெறுவதற்காக கண்டுபிடித்த “மாந்திரீக, யந்திர, தந்திர” கலைகளில் ஒன்று தான் இந்த “வசியக்கலை”.

siddhargal

அக்காலங்களில் அடர்ந்த வனங்களிலும், மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அந்த வனங்களில் வாழும் கொடிய விலங்குகளால் தங்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க இவ்வசியக்கலையை பயன்படுத்தி, அவ்விலங்குகளை தங்களுக்கு நட்பான செல்லப்பிராணிகளைப் போல் மாற்றி அதிசயம் புரிந்தனர். காலப்போக்கில் இக்கலையை மனிதர்கள் மற்றும் பிற பொருட்களின் மீதும் பிரயோகப்படுத்தி அனைவருக்கும் நன்மை தரும் வகையிலான காரியங்களை செய்தார்கள் சித்தர்கள். மக்களும் இவ்வசியக்கலையை பயன்படுத்தி தங்களுக்கு உரிய நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வதற்கான நுணுக்கங்களை, எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத படி “பரிபாடல்களாக” எழுதி வைத்தனர். ஏனெனில் இவ்வசியக்கலையை தீயவர்கள் கற்றுக்கொண்டு, பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதற்கு இத்தகைய ஏற்பாட்டை செய்தனர் சித்தர்கள்.

இவ்வசியக்கலையில் “நேத்ர வசியம்” எனப்படும் பார்வையால் வசியப் படுத்தல், “மை வசியம்” எனப்படும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் வசியம், “மந்திர வசியம்” எனப்படும் மந்திரங்களை உச்சாடனம் ஜெபிபிப்பதன் மூலம் செய்யும் வசியம் என மூன்றுபிரிவுகள் உண்டு. முதல் இரண்டு வசிய முறைகள் ஒரு நல்ல குருவிடம் பல ஆண்டுகள் முறையாக பயின்றவர்களே செய்ய முடியும். ஆனால் மந்திர உச்சாடன வசியம் என்பது அப்படி அல்ல. கடின பயிற்சிகள் செய்ய முடியாத, சாமானிய மக்கள் தங்களின் நியாயமான ஆசைகள் நிறைவேற சுலபமாக செய்ய கூடியதே மந்திர உச்சாடன வசியம். ஆனால் அதற்கும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Thejas Mantra

இம்மந்திரங்களை உச்சாடனம் செய்யும் காலத்தில் உடல், மனம், எண்ணம், ஆன்மா என அனைத்திலும் தூய்மையை பேண வேண்டும். இதை செய்கிற காலத்தில் புலால் உண்ணுதல், போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு போன்ற செயல்கள் மேற்கொண்டால் வசியம் சித்தியாகாது. மந்திரங்களை 1,00,000 மந்திர உரு ஜெபித்து சித்தி செய்திருந்தால் மட்டுமே சிறந்த பலன்களைக் கொடுக்கும். இப்போது மந்திரத்தை பயன்படுத்தி செய்யப்படும் பண வசியம், பெண் வசிய முறைகளையும், அதற்கான மந்திரத்தையும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

1. பணம் வசியம் மந்திரம்

வாழ்வில் ஒருவர் நல்ல முறையில் வாழ அவருக்கு பொருட்செல்வம் அவசியம். ஆனால் ஒரு சிலர் தாங்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும், அவர்களால் அதிக செல்வத்தை ஈட்டமுடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கான மந்திரம் தான் இந்த பண வசியம் மந்திரம்.

“ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்”

என்னும் இம்மந்திரத்தையம் ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது வேறு ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்க வேண்டும். அதன் பிறகு இந்த மந்திரத்தை தினமும் 108 முறை 1008 முறை என உங்களுக்கு வசதியான எண்ணிக்கையில் தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். 1,00,000 முறை ஜபித்த பின் இந்த மந்திரம் சித்தியாகும். அதன் பிறகு தினமும் இம்மந்திரத்தை காலையில் 108 முறை ஜெபித்து தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றை தொடங்க நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்களுக்கு வந்து சேரும்.

money

2. பெண் வசியம் செய்யும் மந்திரம்

பெண் வசியம் பற்றி கூறும்போதே சிலர் மிகுந்த ஆர்வம் கொள்வது இயற்கையானதே. அதே நேரத்தில் இம்மந்திரத்தை தவறான எண்ணங்களுடன் உங்களுக்கு
சம்மந்தம் இல்லாத அந்நியமான பெண்கள் மீது பிரயோகிக்க முயற்சித்தால், சித்தர்கள் மற்றும் அற்புதமான இக்கலையை சித்தர்களுக்கு சொன்ன “சிவபெருமானின்” கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளாவீர்கள். மேலும் உங்கள் வருங்கால சந்ததியினர் இந்த சாபத்தால் பல வித துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பது இம்மந்திரத்தை மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்த சித்தர்களின் வாக்காகும். எனவே எச்சரிக்கை தேவை.

“சிவ வசி வசி சிவ”

என்னும் இம்மந்திரத்தை ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து உரு ஜெபிக்க தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு உங்களால் எத்தனை எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க முடியுமோ, அதையே தொடர்ந்து செய்து 1,00,000 எண்ணிக்கையை எட்டும் வரை உரு ஜெபிக்க வேண்டும். இந்த 1,00,000 எண்ணிக்கையிலான மந்திர உரு ஜெபித்து சித்தி செய்த பின்பு, நீங்கள் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட நினைக்கும் பெண்ணை மனதில் நினைத்து, இம்மந்திரத்தை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ கூறி வர அந்தப் பெண் உங்களுக்கு வசியம் ஆகி, உங்களை நோக்கி ஈர்க்கப்படுவாள். முன்பே கூறியது போல இந்த வசியத்தை தவறான நோக்கில் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதையும் படிக்கலாமே:
2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு

English overview:
Here we described about two different kind of vasiyam in Tamil. One is pana vasiyam manthiram and next is pen vasiyam manthiram in Tamil. Here we have answer for two questions. one is pen vasiyam seivathu eppadi in Tamil and next is panam vasiyam seivathu eppadi in Tamil.