- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகையில் இருக்கும் பணம் கரையாமல் இருக்க பணத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? இதில் மட்டும்...

கையில் இருக்கும் பணம் கரையாமல் இருக்க பணத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? இதில் மட்டும் வைத்தால் சென்ற வழியே பணம் கூட திரும்பி நம்மிடம் வந்துவிடும்!

- Advertisement -

எப்பொழுதும் கைகளில் இருக்கும் பணமானது நம்மிடம் நிலையாக தங்குவது இல்லை. ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்கிற பழமொழிக்கு ஏற்ப வருகின்ற பணத்தை விட, செலவானது அதிகமாகவே இருக்கும். பிறகு நம் தேவைகள் முழுமையாக எப்படி பூர்த்தி அடையும்? இப்படி நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமானது நம் கையில் நிலைக்காமல் இருப்பதற்கு ஜாதக ரீதியாக எவ்வளவு காரணங்கள் இருந்தாலும், சாஸ்திர ரீதியாக உங்கள் அலட்சியமே அதற்கு முதல் காரணமாக இருக்கும். அதை சரி செய்வதற்கான எளிய பரிகாரம் தான் இது. அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

money4

பணத்தை நீங்கள் தாராளமாக செலவு செய்பவர்களாக இருந்தால் பணமானது மீண்டும் மீண்டும் கண்டிப்பாக உங்களை தேடி வந்து கொண்டே தான் இருக்கும். செலவு செய்தால் எப்படி பணம் மீண்டும் நம்மிடம் வரும்! என்று ஆச்சரியமாக இருக்கிறதா? நீங்கள் செலவு செய்யும் பணம் ஆனது உங்கள் சுய நலத்திற்காக அல்லாமல், பொது நலத்திற்காக தாராளமாக செலவு செய்து வந்து கொண்டே இருந்தால் பொது நலத்துடன் சேர்ந்து உங்களுடைய சுயநலமும் சேர்ந்து பூர்த்தியாகி விடும். அந்த அளவிற்கு பணமானது வந்து கொண்டே இருக்கும். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பணத்தை தந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

நீங்கள் பணத்தை எப்பொழுதும் செலவு செய்யும் அதே சமயத்தில், சேமிக்கவும் செய்ய வேண்டும். செலவு செய்யாமல் சேமிக்க மட்டுமே செய்யும் பணமானது எப்பொழுதும் நம்மிடம் நிலைப்பது இல்லை. அது தேவை இல்லாமல் வீண் விரயமாகி கையில் பணமே இல்லாமல் போய்விடும். ஒருபுறம் நல்ல விஷயங்களுக்காக செலவு செய்வதும், மறுபுறம் நம் தேவைக்காக சேர்த்து வைப்பதும் என்று இருப்பது தான் பணத்தை சேர்ப்பதற்கான நல்ல சூட்சம வழியாகும்.

cash-box

நீங்கள் சேமிக்கும் பணத்துடன் இந்த சில பொருட்களை வைத்திருந்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நியதி. தேக்கு மரம் தேக்கி வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்று கூறுவார்கள். தேக்கு மரத்தால் ஆன பெட்டியில் பணத்தை வைத்தால் பணம் பெருகும் என்பது சூட்சமம். ஆனால் அதை நம்மால் வாங்க முடியாவிட்டால் சிறிய தேக்கு துண்டு ஒன்றை பணத்துடன் சேர்த்து வைத்தால் போதும். நகை கடைகளில் நகையை மடித்துக் கொடுக்க பயன்படுத்தும் ரோஸ் நிற பேப்பர் பணத்தை அதிகமாக நம்மிடம் சேர வைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பேப்பரை ஒரு டப்பாவில் வைத்து விரித்து அதனுடன் நீங்கள் சேமிக்க நினைக்கும் பணத்தையும், அதனுடன் கொஞ்சம் நாணயங்களையும் வையுங்கள்.

- Advertisement -

பணத்தை ஈர்க்கக் கூடிய தேக்கு மரத் துண்டு, மகாலட்சுமிக்கு வாசம் என்றால் மிகவும் பிடிக்கும் எனவே அங்கு ஜவ்வாது பவுடர் அல்லது பேஸ்ட் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளலாம். பின்னர் அதனுடன் உங்களுடைய நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத தங்க நகைகள் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். தேக்கு, தங்கம், பணம், நாணயம், ஜவ்வாது இவற்றுடன் ஒரு கண்ணாடி ஆகியவற்றை வையுங்கள். சிறிய அளவிலான புதிய கண்ணாடி ஒன்றை இப்படி வாங்கி வைப்பதன் மூலம் பணமானது மென்மேலும் பெருகும் என்று நம்பப்பட்டு வருகிறது.

cash-box-mirror

கண்ணாடி இருக்கும் இடமெல்லாம் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை, எனவே பணத்துடன் சேர்த்து இது போல் சிறிய கண்ணாடி ஒன்றை வைத்து மகாலட்சுமிக்கு பிடித்தமாக வாசம் நிறைந்த இடமாக வைத்துக் கொண்டால் நிச்சயம் செல்வமானது நம்மிடமிருந்து கரையாமல் மென்மேலும் பெருகிக் கொண்டே இருக்கும். இப்படி செய்யும் பொழுது நமக்கே மேலும் மேலும் அதில் பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற ஆசையும் உண்டாகும். இந்த ஆசையை தூண்டி விடுவதற்கு தான் இவ்வாறெல்லாம் சூட்சுமமாக பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்