பணத்தை என்ன செய்தால் மேலும் மேலும் பெருகும் என்கிற சூட்சம ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா? இப்படி செய்து பாருங்கள் பணமழை 100% பொழியும்.

kubera lingam-money

பொதுவாகவே பணம் என்பது பணம் அதிகமாக வைத்திருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஈரமான இடத்தில் ஈரம் ஈர்ப்பது போல பணம் இருக்கும் இடத்தில் தான் மீண்டும் புதிதாக பணம் சேரும். அதனால் எந்த காரணம் கொண்டும் பணம் இருக்கும் இடத்தை துடைத்து வைக்காதீர்கள். ஒரு இடத்தில் நீங்கள் பணத்தை வைக்கிறீர்கள் என்றால், அந்த இடத்தில் இருக்கும் பணத்தை ஒரு ரூபாய் கூட மிச்சம் வைக்காமல் எடுத்து செலவு செய்யாதீர்கள். இவ்வாறு செய்வதால் பணம் பெருகுவதற்கு வாய்ப்புகள் தடைபடும் என்பது விதி. இப்படியான பண ஈர்ப்பு விதிகளை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

money

தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் நீங்கள் புன்னகை பூத்த முகத்துடன் வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டால் ஸ்ரீதேவி உங்களிடம் வரமாட்டாள், மூதேவி தான் வருவாள். லட்சுமி கடாட்சம் என்பது ஒருவருடைய சிரித்த முகத்தில் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எந்த அளவிற்கு வருமானம் ஈட்டக்கூடிய இடத்தில் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு வருமானம் பெருகும்.

பணம் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பணம் இருக்கும் இடத்தில் சுத்தமாக இல்லாவிட்டால் தரித்திரம் வந்து சேரும். பண தடை ஏற்படும் என்பது விதி. பணம் வைத்திருக்கும் பீரோ, லாக்கர், மணி பர்ஸ், கல்லாப்பெட்டி போன்ற இடங்களில் குப்பை கூளமாக வைத்துக் கொள்ளாமல் சுத்தமாக பணத்தை ஈர்க்கும் ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் கிராம்புகளைப் போட்டு வைத்தால் மேலும் மேலும் பணம் பெருகும் என்பது ஐதீகம்.

kirambu-elam-pachaikarporam

உங்களுடைய மணிபர்சில் அல்லது ஹேண்ட் பேக்கில் எப்போதும் தெய்வ உருவம் பொறித்த நாணயங்களை வைத்துக் கொள்ளுங்கள். இது மேலும் மேலும் பணம் பெருக வழி வகுக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் லிங்க வடிவில் ராஜ அலங்காரத்தில் இருக்கும் குபேர லிங்க படத்தை மட்டும் நீங்கள் பர்சில் வைத்துக் கொண்டால் போதும். எல்லா வழிகளிலும் பணம் உங்களை வந்து அடையும். உங்கள் காட்டில் பிறகு பண மழை தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் வரவு செலவு கணக்குகளை சரியாக பார்ப்பவரா? 100 ரூபாய் செலவு செய்தால் கூட கணக்குப் பார்த்து செலவு செய்பவராக இருந்தால் உங்களிடம் அதிக பணம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தெய்வீக சட்டத்தைப் பொறுத்தவரை கணக்கு வழக்குகளை சரியாக பார்ப்பவர்களிடம் கணக்கே இல்லாமல் செல்வம் சேர வேண்டும் என்பது விதி. இது தனிப்பட்ட செலவுகளை செய்பவர்களுக்கு பொருந்தும். வள்ளல் போல் மற்றவர்களுக்கு செலவு செய்பவர்களிடமும் பணம் அதிகரிக்கும். பொதுவாகவே சுயநலமாக இல்லாமல் பொது நலத்தோடு செலவு செய்பவர்களிடம் பணம் பெருகும். ஆனால் தனக்காக செலவு செய்யும் பொழுது சற்று யோசித்து தான் செலவு செய்ய வேண்டும். தாம்தூம் என்று செலவு செய்தால் பணத்தடை தான் வரும் என்பது பண ஈர்ப்பு விதிகளில் ஒன்று.

kadan

எந்த வகையிலும் உங்களிடம் இருந்து ஒரு தொகை மற்றவர்களிடம் செல்லும் பொழுது அந்த பணத்தை எப்படி தர வேண்டும் தெரியுமா? பணத்தின் தலைப் பகுதி நம்மை நோக்கிய படி எப்போதும் கொடுப்பது பணத்தை மேலும் மேலும் உங்களிடம் வரவழைக்கும் என்பது பண ஈர்ப்பு விதி. இவைகளை கடைபிடித்து பாருங்கள் உங்களிடம் தடையில்லா பணம் வந்து சேரும் என்பது உண்மை.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு துரதிர்ஷ்டசாலி என்ற பட்டம் உள்ளதா? வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும், நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.