எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு கட்டுக்கடங்காமல் வந்துகிட்டே இருக்கா? உங்க மணி பர்ஸில் இந்த ஒரு பொருளை வெச்சு பாருங்க செலவுகள் குறையும்!

money-purse-atchathai-rice
- Advertisement -

முன்பு குறைந்த சம்பாத்தியத்தில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் கூட, இன்று கை நிறைய சம்பாதித்தாலும் அதில் குடும்பம் நடத்த முடியாமல் செலவுகள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்று புலம்புகிறார்கள். இந்த தரித்திர நிலையிலிருந்து மீண்டு, செலவுகள் கட்டுக்குள் வருவதற்கு உங்களுடைய மணி பர்சில் இதை வைத்து பாருங்கள். அது என்ன? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்முடைய பணம் வைக்கும் இடம் மணி பர்ஸ் ஆகும். ஆண்களாக இருப்பினும், பெண்களாக இருப்பினும் பணத்தை மணி பர்சில் தான் அதிகம் வைக்கிறோம். அன்றாட செலவுக்கு உரிய பணத்தை வைக்கக்கூடிய இந்த மணி பர்ஸ் முதலில் கிழிந்து போய் இருக்கக் கூடாது. கிழிந்த மணி பர்ஸில் கண்டிப்பாக பணம் சேரவே சேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிலர் சென்டிமென்ட் ஆக வருட கணக்கில் ஒரே பர்சை பயன்படுத்துவார்கள். அது கிழிந்து நைந்து போய் இருக்கும். ஆனால் அதை விடவே மாட்டார்கள். இப்படி கிழிந்து போன மணி பர்சை பயன்படுத்துபவர்களிடம் கண்டிப்பாக பணம் சேராது. அப்படியே சேர்ந்தாலும் கட்டுக்கடங்காமல் அதிலிருந்து எடுத்து செலவு செய்து கொண்டே இருப்பார்கள். சேமிப்பு என்பது குறையும். சேமிப்பு குறைய தொடங்கினால் செலவுகள் அதிகரிக்கும்.

நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் அந்த உழைத்த பணத்தை கொஞ்சமாவது சேமிக்க வேண்டும். இந்த சேமிப்பு தான் நம்மை நிம்மதியாக இருக்கச் செய்யும். அடுத்தவர்களிடம் போய் கைகட்டி பணத்திற்காக நிற்காமல் கௌரவமாக வாழ வைக்கக்கூடிய ஒரு விஷயம் சேமிப்பு! இந்த சேமிப்பை செய்ய முடியாமல் கட்டுக்கடங்காத செலவினை சந்திக்க கூடியவர்கள் உங்களுடைய மணி பர்சில் அட்சதை எனப்படும் புனிதமான ஒரு விஷயத்தை பேப்பரில் மடித்து வையுங்கள்.

- Advertisement -

அட்சதை எனப்படுவது அரிசியும், மஞ்சளும் கலந்த ஒரு கலவையாகும். திருமண விழாக்களின் பொழுது, மற்ற நல்ல நாட்களின் பொழுது அன்புக்குரியவர்களை ஆசீர்வதிக்க பயன்படுத்தப்படும் ஒரு புனிதமான பொருள் ‘அட்சதை’ ஆகும். ஒரு தட்டு முழுக்க அரிசியை பரப்பி அதில் மஞ்சள் தூளை போட்டு கலந்து வைப்பார்கள். இதைத்தான் அட்சதை என்று கைகளில் திருமணங்களின் பொழுது கொடுக்கப்படுகிறது. இந்த அட்சதையை போட்டு வாழ்த்தும் போது அந்த வாழ்த்தானது கண்டிப்பாக பலிக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
கணவன் – மனைவி இருவரும் தெரியாமல் கூட இந்த நாளில் மட்டும் சண்டை போட்டுக்காதீங்க! அப்புறம் உங்க சண்டைக்கு எண்ட் இல்லாமல் போய் விடுமாம் தெரியுமா?

அத்தகைய புனிதமான ஒரு பொருளாக இருக்கக்கூடிய இந்த அட்சதையை சிறிதளவு தயார் செய்து பூஜை அறையில் வைத்து மனதார உங்களுடைய இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். கட்டுக்கடங்காத இந்த செலவினை கட்டுப்படுத்துமாறு மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். நான் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பினை வீணாக்காமல், அனாவசிய செலவுகளை செய்யாமல், கொஞ்சமாவது சேமிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த அட்சதையில் இருந்து சிறிதளவு எடுத்து ஒரு சிறிய பேப்பரில் போட்டு மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே உங்களுடைய பணம் வைக்கக்கூடிய பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பர்ஸ் கிழிந்து போகாத நல்ல பர்ஸ்சாக இருப்பது நல்லது. மேலும் அதில் வாசனை மிகுந்த பணத்தை ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றையும் போட்டு வையுங்கள். பிறகு பாருங்கள் பணம் சேருதோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக செலவுகள் குறைவதை நீங்கள் காணலாம்.

- Advertisement -