கணவன் – மனைவி இருவரும் தெரியாமல் கூட இந்த நாளில் மட்டும் சண்டை போட்டுக்காதீங்க! அப்புறம் உங்க சண்டைக்கு எண்ட் இல்லாமல் போய் விடுமாம் தெரியுமா?

sukran-couple-fight
- Advertisement -

கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொள்வது என்பது இயல்பான ஒரு விஷயம் என்றாலும், எந்த நாளில் அந்த சண்டையை போட்டுக் கொள்கிறோம்? என்பதிலும் சில ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க கூடிய அளவிற்கு போய்விடாமல் இருக்க, இந்த நாளில் தெரியாமல் கூட நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவி சண்டையிடக் கூடாத நாள் எந்த நாள்? அந்த நாளில் மட்டும் ஏன் சண்டையிடக் கூடாது? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குடும்பம் என்றால் அதில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது சகஜமான ஒன்று. சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் கொஞ்ச நேரத்திலேயே அந்த சண்டை மறைந்து விடுவது தான் நல்ல தாம்பத்திய உறவுக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் அதை ஓரிரு நாட்கள் வரை நீடிக்க செய்து பின்பு அந்த சண்டையிலிருந்து வெளியில் வருவார்கள். இதுவும் பரவாயில்லை தான் ஆனாலும் உடனே சரியாவது தான் ரொம்பவும் நல்லது. நேரம் அதிகம் கொடுத்தால் பிரிவுக்கு வழிவகுக்கும்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் சண்டை என்பது வெள்ளிக்கிழமையில் வரக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர மற்றும் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. சுக்கிர பகவான் உடல் மற்றும் திருமண மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கிறார். சுகபோக வாழ்க்கையை கொடுக்கக்கூடிய இவரது நாளில் கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்குள் நிரந்தர பிரிவு வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டாம்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அது நாளடைவில் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. சுக்கிரனுக்கு உரிய இந்த வெள்ளிக்கிழமையில் சண்டையிட்டுக் கொண்டால் சாதாரண சண்டை கூட வெறுப்பாக மாறி பெரிய சண்டையாக போய் விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மற்ற நாட்களில் சண்டையிட்டுக் கொண்டாலும் இதே நிலைதான்! ஆனாலும் வெள்ளிக்கிழமையில் சுக்கிர அருள் குறைந்து போகும் என்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்குவதற்கு இடம் தராதீர்கள்.

- Advertisement -

சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் வெள்ளிக்கிழமையில் கிடைக்கும் என்பதால் தான் மற்ற நாட்களை காட்டிலும் வெள்ளிக்கிழமைக்கு இந்து சமுதாயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வைத்தால் சுக்கிர அருள் கிடைத்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க கூடும். வீடு, வாசல், சொத்து, சுகத்துடன் இருக்க கண்டிப்பாக வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய பூஜை முறைகளை சரியாக செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே:
கருப்பு நிற ஆடையை அணியக்கூடாத ராசிகள் எவை? அதிலும் சனிக்கிழமை மட்டும் இந்த தவறை செஞ்சுடாதீங்க.

அப்படிப்பட்ட புனிதமான இந்த நாளில் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் அழுது வடிந்து கொண்டிருந்தாலோ, வீட்டை இருட்டாக வைத்திருந்தாலோ, கணவன் மனைவிக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் நன்மை உண்டாகாது. சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாக வெடித்து தம்பதிகள் இருவரும் பிரிந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கருத்து வேறுபாடுகள் இல்லாத கணவன் மனைவி இருக்கவே முடியாது. அவர்களுக்குள் இருக்கும் நல்லவைகளை மட்டும் பட்டியலிட்டு, அவர்களிடம் இருக்கக் கூடாத தவறான விஷயங்களை மென்மையாக சுட்டிக்காட்டி அதனை மாற்ற முயற்சித்து அந்த உறவை மென்மேலும் புனிதமாக்க வேண்டுமே தவிர, சீ… நீ என்ன இப்படி இருக்கிறாய்? என்று அவர்களை குறை சொன்னால் வாழ்க்கை நரகமாகிவிடும்.

- Advertisement -