- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் வீட்டில் குறையாமல் இருக்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்பு

பணம் வீட்டில் குறையாமல் இருக்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்பு

- Advertisement -

பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டில் கொண்டு வந்து வைத்தால் ஏதோ ஒரு காரணத்தினால் வைத்த இடம் தெரியாமல் பணம் காலி ஆகிக்கொண்டே போகும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான ஒரு காரணமாக திகழ்வது மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்காது தான். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை நாம் பரிபூரணமாக பெறவும் அதே சமயம் அந்த அருளை நம்முடனே தக்கவைத்துக் கொள்ளவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஆன்மீக குறிப்புகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணம் செலவு ஆகாமல் இருக்க டிப்ஸ்

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் விளக்கேற்றி தங்களுக்கு தெரிந்த பூஜை முறைகளை பின்பற்றி வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்தாலும் ஒரு சிலருக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கும். பண வரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல வழிபாடுகளை செய்தாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது என்று நினைப்பவர்கள் தங்களுக்கு தெரியாமல் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அப்படி என்ன தவறுகள் செய்தால் வீட்டில் பணம் தங்காது என்று தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

பொதுவாக பலரும் தங்கள் வீட்டு நிலை வாசலில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். அவ்வாறு விளக்கேற்றும் பொழுது அந்த விளக்கில் இருந்து எண்ணெய் ஆனது நிலை வாசலில் சிந்தக்கூடாது. இப்படி நிலை வாசலில் எண்ணெய் சிந்தினால் மகாலட்சுமி தாயார் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. வீட்டில் இருக்கும் சுவாமி படங்களுக்கு அவர்களுக்குரிய தினங்கள் வரும்பொழுது நம்மால் இயன்ற பூஜைகளை செய்ய வேண்டும். அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு பூஜையை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் வீட்டிலேயே இருப்பாள்.

ஒரு சிலரின் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்கும் பழக்கம் இருக்கும். அந்த பிராணிகளை நாம் வளர்ப்பதாக இருந்தால் அதற்குரிய முறையான பராமரிப்பு மேற்கொண்டு வளர்க்க வேண்டும். அடுத்ததாக நம்முடைய சமையலறையில் உப்பு, ஊறுகாய் போன்ற பொருட்களை பீங்கான் ஜாடியில் வைத்திருப்போம். அவ்வாறு வைத்திருக்கும் உப்பும் ஊறுகாயும் என்றென்றைக்கும் நிறைந்து இருக்க வேண்டுமே தவிர்த்து குறைய கூடாது. உப்பும் ஊறுகாயும் நிறைந்து இருந்தால் வீட்டில் செல்வமும் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சுக்கிர பகவானுக்குரிய பொருளாக திகழ்வதுதான் தண்ணீர், தண்ணீரை எந்த ஒரு வீட்டில் அதிகமாக வீண் விரையம் செய்கிறார்களோ அந்த வீட்டில் பணமும் வீண் விரயம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதோடு வீட்டிற்கு முன்புறமாக தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தண்ணீர் தேங்கி இருக்கும் பட்சத்தில் பண வரவிற்குரிய தடைகள் அங்கு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர சிவ மந்திரம்

மேற்சொன்ன இந்த குறிப்புகளில் கவனம் செலுத்தி சரியாக நடந்து கொள்ளும் பட்சத்தில் மகாலட்சுமி தாயாரின் அருளை நாம் பரிபூரணமாக பெற முடியும். இதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பணமானது குறையாமல் நிறைந்து கொண்டே செல்லும்.

சற்று முன்