- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீய சக்தி விலக வியாழக்கிழமை குருஹோரை பரிகாரம்

தீய சக்தி விலக வியாழக்கிழமை குருஹோரை பரிகாரம்

- Advertisement -

இப்போதுள்ள போட்டி நிறைந்த உலகில் நம்முடைய ஒவ்வொரு நாளையும் நாம் எத்தனையோ துன்பப்பட்டு நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஒரு செயலை நாம் சாதிப்பதற்கு அத்தனை கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. அவ்வளவு இழக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பார்ப்பவர்களுக்கு இது எதுவும் தெரியாது . நாம் நல்ல முறையில் வாழ்வது மட்டும் தான் தெரியும். அதை பார்த்து அவர்களுக்கு பொறாமை படம் மட்டும் தான் தெரியும்.

அவர்களுக்கென்ன நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்று சாதாரணமாக சொல்லி விட்டு போய் விடுவார்கள். இன்னும் சிலரோ இவர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்களே நமக்கு இதையெல்லாம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கப் பெருமூச்சு வேறு இருக்கும். இந்த கண் திருஷ்டியும் தீய எண்ணங்களும் தாக்கி விட்டால் போதும். நம்முடைய வளர்ச்சி அடியோடு தடைப்பட்டு விடும்.

- Advertisement -

வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரும் இப்படி தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத் தான் செய்கிறது. எத்தனையோ சிரமப்பட்டார்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறார்கள் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தவும் செய்வார்கள். ஆனால் அது வெகு சிலர் தான். இந்த பொல்லாத கண் திருஷ்டியாலும் தீய எண்ணங்களாலும் நாம் படும் அவஸ்தைகளில் இருந்து நீங்குவதற்கான ஒரு எளிய பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் நீங்க பரிகாரம்

இந்த பரிகாரம் மிக மிக எளிது ஆனால் இதை செய்யக்கூடிய நேரம் தான் மிகவும் முக்கியமானது. இதை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் செய்ய வேண்டும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள் அன்றைய தினத்தில் அவருக்கான பூஜை நேரத்தில் இதை செய்வது தான் பலனை தரும்.

- Advertisement -

இதற்கு குருவிற்கு உகந்த நிறமான மஞ்சள் நிறத்தில் ஒரு சிறிய பட்டு துணி வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி வாங்க முடியாதவர்கள் மஞ்சள் நிற காட்டன் துணி வாங்குங்கள். ஆனால் பட்டுத்துணி நல்ல பலனை தரும். அதில் கொஞ்சம் வெண்கடுகை வைத்து மூட்டையாக கட்டி விடுங்கள் இந்த முட்டையை பூஜை அறையில் வைத்து மனதார வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டி தொங்க விடுங்கள்.

வீட்டில் தொங்க விடுவதற்கான இடம் இல்லை என்றால் கொஞ்சம் உயரத்தில் கை படாத இடத்தில் வைத்து விடுங்கள். அதன் பிறகு தினந்தோறும் இந்த முடிச்சிக்கு நீங்கள் கற்பூர தீபாராதனையோ அல்லது ஊதுபத்தியோ காட்டி வர வேண்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை அன்று இதே போல குருஹோரையில் இதை எடுத்து விட்டு புதிதாக மாற்றி வையுங்கள்.

- Advertisement -

இதே போல தொடர்ந்து செய்து வரும் போது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதோடு இந்த முடிச்சு பண ஆகர்சனத்தை ஏற்படுத்தும்.இதனால் வீட்டில் ஏற்பட்டிருக்கும் பணத்தடை நீங்குவதோடு நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களும் விரைவில் குணமாக கூடிய தன்மை ஏற்படுத்தும் நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய குரு பகவானின் அருளும் கிட்டும்.

இதையும் படிக்கலாமே: சகல சௌபாக்கியத்தையும் பெற கிருத்திகையில் முருகனை வழிபடும் முறை

சிறிதளவு வெண்கடுகு நம்முடைய இத்தனை பெரிய பிரச்சனைகளை தீர்க்கும் எனில் அதற்கு எத்தனை பெரிய சக்தி உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வியாழக்கிழமையில் குரு பகவானின் அருளோடு செய்யக்கூடிய இந்த பரிகார முறை நல்ல பலன் அளிக்கக் கூடியது என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

சற்று முன்