சகல சௌபாக்கியத்தையும் பெற கிருத்திகையில் முருகனை வழிபடும் முறை

murugan dheepam
- Advertisement -

கந்தா என்று பக்தர்கள் மனம் உருகி எதை கேட்டாலும் இந்தா என்று உடனே அருளக் கூடிய இளகிய மனம் கொண்டவர் தான் கந்த கடவுள். அவரை தொழுவதற்கு என்று நாள் கிழமை எதுவும் தேவையில்லை. அவரை மனதில் நினைத்தாலே போதும் நம்முடைய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அப்படி இருந்தாலும் கூட தெய்வ வழிபாட்டிற்கென சில நாட்கள் திதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த நாட்களில் அவர்களை வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல் உடனே பறித்து கூடுதல் பலனை பெற முடியும். ஒவ்வொரு தெய்வங்களையும் அவர்களுக்கான விசேஷமான நாளில் நம் வணங்குகிறோம் அப்படி கந்த கடவுளுக்கு விசேஷமான தினங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானது கிருத்திகை விரதம் இந்த நாளில் நாம் அவரை எப்படி வழிபட்டால் நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கிருத்திகையில் முருகனை வழிபடும் முறை

கிருத்திகை அன்று முருகனை வழிபடுவதற்கு முதல் நாளே பூஜை அறை முதல் அனைத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும். கிருத்திகை தினத்தன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து விட்டு முருகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி விட வேண்டும்.

பெரும்பாலும் முருகர் வழிபாடுகள் அனைத்தும் மாலை நேரத்தில் செய்வது சிறந்தது. ஆகையால் இந்த கிருத்திகை வழிபாட்டையும் மாலை நேரத்தில் செய்யுங்கள். இதற்கு நீங்கள் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து வழிபட்டால் இன்னும் அதிகமான பலனை பெறலாம். இது அவரவர் உடல் நிலையை பொறுத்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மாலையில் முருகர் படத்திற்கு நல்ல வாசனை மிக்க ஜவ்வாது உனது இவையெல்லாம் சந்தனத்துடன் சேர்த்து பொட்டு வைத்து குங்குமம் வைத்து விடுங்கள் முருகருக்கு பிடித்த செண்பக மலர் அல்லது செவ்வரளி மலரால் மாலை கட்டி போடுங்கள். வேலிருந்தால் அன்றைய தினத்தில் வேறு வழிபாடு செய்யுங்கள். இது அதீத பலனை பெற்றுத் தரும்.

அதன் பிறகு பூஜை அறையில் முருகர் படத்திற்கு முன்பாக ஒரு அகல் தீபம் வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றங்கள். இது முருகருக்கு மிகவும் உகந்த எண்ணெய். அதுமட்டுமின்றி இது நம்முடைய கர்மாவை தீர்க்கக் கூடியதாக சொல்லப்படுகிறது. இத்துடன் ஆறுமுகனுக்கு அன்றைய தினத்தில் ஆறு வகையான நெய்வேத்தியங்களை படைப்பது சிறந்தது.

- Advertisement -

அப்படி செய்ய முடியாதவர்கள் முருகருக்கு உகந்த திணை மாவு நெய்வேத்தியத்தை வைக்கலாம். அதன் பிறகு பூஜையறையில் அமர்ந்து அன்றைய தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை ஆறு முறை படியுங்கள். கந்த சஷ்டி கவசத்தை ஆறு முறை படிக்க நேரம் ஆகுமே என்றெல்லாம் யோசிக்க கூடாது. கந்தனின் அருளை முழுமையாக பெற நாம் சிறிது சிரத்தை ஆகத் தான் பூஜை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை கந்த சஷ்டி கவசம் சொல்லி முடிக்கும் போதும் முருகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி ஓம் சரவண பவ என்ற நாமத்தை சொல்லுங்கள். இப்படியாக ஆறு முறை கந்த சஷ்டி கவசம் படித்து ஆறு முறை தீபாரதனை காட்டிய பிறகு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். விரதம் இருப்பவர்கள் முருகருக்கு படைத்த நெய்வேத்தியத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு முருகர் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். இது உங்களுடைய விரோதத்தையும் பூஜையின் பலனையும் பல மடங்கு பெருக்கி தரும். கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை இந்த முறையில் வழிபடுபவர் வாழ்க்கையில் இல்லை என்ற வார்த்தைக்கு வழியில்லாத அளவிற்கு சந்தோஷமாக வாழ வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் விலக தாந்த்ரீக பரிகாரம்

நாளைய தினம் கிருத்திகையில் முருகப்பெருமானை நம்பிக்கையுடன் வழிபட்டால் முருகனை முழுவதுமாக பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -