மகாலட்சுமியை இழுத்துக்கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள் அமர வைக்க கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. இந்த பொருள் இருக்கும் வீட்டில் நிச்சயமாக வறுமை இருக்காது.

mahalashmi1

மகாலட்சுமியை வசிய படுத்துவதற்காக பல வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நாம் பின்பற்றி வந்திருப்போம். இருப்பினும் சில பேரது வீட்டில் பணக்கஷ்டம் தீராமல் இன்றளவும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் வருகின்றார்கள். பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு இந்த எல்லாப் பொருட்களுக்கும் வசியமாகத மகாலட்சுமியை, நாம் எப்படி வசியப்படுத்துவது? வேறு எந்த பொருளை வைத்தால் மகாலட்சுமியை நம் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kasthuri-maan

இந்த பொருளைப் பற்றி நாம் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். எல்லா இடங்களிலும் சுலபமாக இந்த பொருள் கிடைத்து விடாது. இது கிடைப்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான். இருப்பினும் தேடி கண்டுபிடித்து, இந்த பொருளை வாங்கி உங்கள் வீட்டு பணப்பெட்டியில் வைத்து விட்டால் போதும். மகாலட்சுமி நிச்சயம் உங்கள் வசம் ஆவார்கள்.

அது எந்தப் பொருள் என்பதை ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல் இப்போதே தெரிந்து கொள்வோமா? இது ஒருவகை மான் இனத்திலிருந்து எடுக்கக்கூடிய பொருள். இதனுடைய பெயர் ‘கஸ்தூரி காய்’ என்று சொல்லுவார்கள். மான் வகைகளில் கஸ்தூரிமான் என்ற ஒரு வகை உண்டு. இதை கவரிமான் என்றும் சிலர் சொல்லுவார்கள். இந்த கஸ்தூரி மான் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு விலங்கினமாக சொல்லப்பட்டுள்ளது.

kasthuri-kaai

கஸ்தூரி மானின் உடம்பிலிருந்து, வால் பகுதியிலிருந்து எடுக்கக்கூடிய பொருள் தான் கஸ்தூரி காய். இது எங்கு கிடைக்கும்? மிகவும் பழமையான நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஆன்லைன் ஷாப்பிங்கில் பதிவு செய்து இதை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால், இந்த கஸ்தூரி காய் மார்க்கெட்டில் நிறைய போலியாக கிடைக்கின்றது என்ற தகவலையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். போலியான கஸ்தூரி காயை வாங்கி நம் வீட்டில் வைத்தால் அது நமக்கு பலன் கொடுக்காது.

- Advertisement -

அசல் கஸ்தூரி காயிலிருந்து நமக்கு நல்ல மணம் வீசும். மேலே இருக்கும் அந்த ரோமங்கள் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் பூக்காத மொட்டுக்களாக இருக்கும், பூக்களை இந்த கஸ்தூரிக்கு அருகில் வைத்தால் அது கொஞ்ச நேரத்திலேயே பூக்கும் என்ற தகவலும் சொல்லப்பட்டுள்ளது. யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாமல் தெரிந்தவர்களிடம் அசல் கஸ்தூரி காயாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

kasthuri-kaai1

இந்த கஸ்தூரி காயை முறையாக எப்படி பணப்பெட்டியில் வைப்பது? ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி அல்லது பீங்கான் பவுலில் இந்த கஸ்தூரி காய வைத்துவிட்டு, இதன் உள்ளே மகாலட்சுமிக்கு உகந்த மற்ற பொருட்களையும் போட்டு, வைக்கலாம். இந்த பொருளைதான் போட்டு வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

kasthuri-kaai2

சோழி, ஏலக்காய், மஞ்சள் குங்குமம், பச்சை கற்பூரம், கிராம்பு, இப்படி உங்கள் வீட்டில் மகாலட்சுமிக்கு உகந்த எந்த வாசனைப் பொருட்கள் இருக்கின்றதோ, அதே கிண்ணத்தில் போட்டு வையுங்கள். கிண்ணத்தை மூடி வைக்கக்கூடாது. இந்த கஸ்தூரி காய் உங்கள் வீட்டு பணப்பெட்டியில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பொருட்களின் பட்டியலில், இந்த கஸ்தூரி காய்க்கும் முதலிடம் இருக்கிறது.

cash

சில பேருக்கு இந்த கஸ்தூரி காயவைத்த சில நாட்களிலேயே அதிர்ஷ்டம் அடித்து விடும். சில பேருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க கொஞ்ச நாள் எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பணம் சம்பாதிக்க உங்களுடைய முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். பணம் சம்பாதிக்கு உங்களுடைய முயற்சிகளை வெற்றியாக்க இந்த கஸ்தூரி காய் உங்களுக்கு துணையாக நிற்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.