பணம் சேர வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பூஜை

mahalashmi
- Advertisement -

மற்ற நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றோமோ இல்லையோ, கட்டாயமாக வெள்ளிக்கிழமை எல்லோர் வீட்டிலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவோம். கற்பூர ஆரத்தி காண்பித்து இறை வழிபாடு செய்வோம். குறிப்பாக இந்த வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் சுக்கிரனுக்கும் உரிய நாள்.

இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம், நம் வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும். அந்த வகையில் உங்க வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை தீர்ப்பதற்கு உண்டான ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இதை செய்பவர்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது. வருமானம் பல மடங்கு பெருகும். பீரோவில் அடிக்கி வைக்க முடியாத அளவுக்கு நிச்சயமாக பணம் சேரும்.

- Advertisement -

பணம் தரும் வெள்ளிக்கிழமை பூஜை முறை

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள். புதுசாக வாங்கிய ஒரு பச்சை துணி. சிறியதாக சதுர வடிவில் ஒரு பச்சை துணியை எடுத்துக்கோங்க. நாம் பயன்படுத்திய துணியாக இருக்கக் கூடாது. புதுசாக வாங்கி தண்ணீரில் நனைத்து துவைத்து காய வைத்த துணையாக இருக்க வேண்டும். பச்சை கற்பூரம், ஜவ்வாது, 100 ரூபாய் நோட்டு.

100 ரூபாய் வைக்க முடியாது என்பவர்கள், 50 ரூபாயும் வைக்கலாம். இல்லை இதற்கு மேலும் என்னால் பணம் வைக்க முடியும் என்பவர்கள், நிதி நிலைமை ஓரளவுக்கு சீராக இருப்பவர்கள் 200, 500 ரூபாயைக் கூட இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிறத்தில் பசும்பாலால் செய்யப்பட்ட பாயாசம் நெய்வேத்தியம் வைத்து, வாசம் நிறைந்த தூபங்களை ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எடுத்து வைத்திருக்கும் பச்சை துணியில் முதலில் கொஞ்சமாக ஜவ்வாது போட்டு, கொஞ்சமாக பச்சை கற்பூரம் வைத்து, அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பணத்தை வைத்து முடிச்சு போடுங்கள். இதை மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிட்டு, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் வருமானம் மேலும் மேலும் பெருகிக்கொண்டே செல்ல வேண்டும் என்றும், கடன் பிரச்சனை இருந்தால் அந்த கடன் சுமை குறைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையில் நிறைவு செய்து கொள்ளுங்கள். முடிந்து வைத்திருக்கும் பச்சை நிற முடிச்சை அப்படியே கொண்டு போய் உங்க பணம் வைக்கும் இடத்தில் வைக்கணும்.

- Advertisement -

உங்க வீட்டு பீரோ, அல்லது பர்ஸ், பணப்பெட்டி எதில் பணம் வைப்பீங்களோ அந்த இடத்தில் இந்த முடிச்சு வச்சிருங்க. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை அது அப்படியே இருக்கட்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அதற்குள்ளே இருக்கும் காசை நீங்கள் எடுத்து பயன்படுத்தக் கூடாது. அந்த காசுக்கு அப்படியே யாருக்காவது அன்னதானம் வாங்கி கொடுக்க வேண்டும். உண்மையிலேயே பசியாக இருப்பவர்கள் நம் வீட்டு அக்கம் பக்கத்தில் கட்டாயம் இருப்பார்கள்.

கோவில்களில் வெளியில் அமர்ந்து யாசகம் கேட்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த நூறு ரூபாய்க்கு இரண்டு பேருக்கு வயிறார காலை உணவோ, மதிய உணவோ, வாங்கி உங்க கையால் கொடுத்துடுங்க. ரூ.50 வைத்து ஒருவருக்கு இந்த அன்னதானத்தை செய்தாலும் சிறப்பு தான். உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த தானத்தை செய்யவும். வெள்ளிக்கிழமை பச்சை நிறத்தில் முடிச்சு போட்டு வைத்த அந்த நோட்டை எடுத்து தானம் செய்யணும் என்பதை மறக்காதீங்க.

இதையும் படிக்கலாமே: 08-03-2024 மகா சிவராத்திரி அன்று யோகம் பெறக்கூடிய மூன்று ராசிகள்

அந்த நோட்டை எடுத்து செலவு செய்து விட்டு மீண்டும் அந்த பச்சை துணியில் இன்னொரு காசை வைத்து முடிந்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யணும். மூணு மாசத்துக்கு ஒரு முறை பச்சை துணியை உள்ளே இருக்கும் பொருட்களையும் மாத்திடுங்க. இந்த வழிபாட்டு முறையை வாரம் தோறும் எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் பின்பற்றி வருகிறார்களோ, அவர்கள் வீட்டில் நிச்சயம் பணக்கஷ்டம் ஏழேழு ஜென்மத்துக்கும் வராது என்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -