இந்த தவறுகளை நீங்கள் செய்பவர்களாக இருந்தால், கட்டாயம் எந்த காலத்திலும் உங்கள் கையில் பணம் சேரவே சேராது.

cash-question

இந்த தவறுகளை செய்வதன் மூலமாக கூடவா நம் கையில் பணம் தங்காது, என்று நினைக்கக் கூடிய அளவிற்கு சில தவறுகளை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த பதிவை படித்து முடித்த பின்பு சரிதான், நாமும் இந்த தவறுகளை செய்கின்றோம் அதனால்தான் நம் கையிலும் பணம் சேரவில்லை என்ற ஒரு சிறிய உள் உணர்வு கட்டாயமாக படிப்பவர் மனதில் ஏற்படும். அந்த அளவிற்கு சில தவறுகளை பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதில் சொல்லப்படும் தவறுகள் உங்களுடைய மனதிற்கு சரி என்று படும் பட்சத்தில், அந்த தவறுகளை இனி நீங்கள் செய்யாதீர்கள். பணம் நிச்சயமாக பல வழிகளில் உங்கள் கைக்கு வரும்.

cash

முதலாவதாக ஒரு தவறு இது பெரும்பாலும் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒரு விஷயம்தான். பணம் இல்லாதவர்கள், பணம் இருப்பவர்களைப் பார்த்து எப்போதுமே தேவையில்லாத பேச்சுக்களை பேசுவது. ‘இவன் பணத்தை சம்பாதித்து எதை தான் சாதித்து விட்டான். போகும்போது பணத்தை தலையில் தூக்கிக் கொண்டா செல்ல போகின்றான். இவனுக்கு பணத்திமிர் பிடித்திருக்கின்றது. பணம் சம்பாதிக்கும் கர்வம் இவனிடத்தில் உள்ளது. பணம் இருந்தால் மட்டும் போதுமா எல்லாவற்றையும் சாதித்து விடலாமா?’ என்ற பேச்சுக்களை முதலில் தவிர்க்க வேண்டும்.

பணம் சம்பாதிப்பது என்பது அவரவர்களுடைய திறமை. நம்மிடம் அந்த பணம் இல்லை என்பதற்காக, இருப்பவர்களை அனாவசியமாக பேசுவது நமக்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணி, நம்மிடம் பணம் சேர்ப்பதை தடுக்கும் என்பதும் இயல்பான ஒரு விஷயம் தான். உங்களிடம் பணம் இல்லை என்ற காரணத்திற்காக பணம் இருப்பவர்களை குறை பேசி எப்போதுமே உங்களது மனதை சமாதானம் செய்து கொள்ள கூடாது. நீங்கள் எப்போது முயற்சி செய்து உழைத்து அதுபோல் பணத்தை சம்பாதிக்கப் போகிறீர்கள். அது மட்டுமே உங்களுடைய மனதில் இருக்க வேண்டும்.

kadan

அடுத்தபடியாக உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை உங்களுடைய தேவைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். தேவைக்கு ஏற்ப பணத்தை பாக்கெட்டிலோ, அல்லது பர்சிலோ வைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக, உங்களுடைய பெருமையை காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக நிறைய பணத்தை அனாவசியமாக கையில் வைத்துக்கொண்டு திரியக்கூடாது. அது அதிகப்படியான செலவை ஏற்படுத்துவதோடு, படிப்படியாக பணம் சேர்வது குறைத்து விடும். பணத்திற்கு கொடுக்கவேண்டிய மரியாதையும் மதிப்பையும் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக உதவி. உதவி செய்யும் விஷயத்திலும் நாம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அவசரம் என்று வரும்போது உயிருக்கு ஆபத்து என்று வரும்போது வேறு வழியில்லை என்று வரும்போது, நாள் கிழமை நட்சத்திரம் இதையெல்லாம் பார்க்க கூடாது. உதவி செய்யும் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், கட்டாயம் உதவி செய்துதான் ஆகவேண்டும்.

ஆனால் அடுத்தவர்களுக்கு கடன் கொடுத்து உதவி செய்யும் பட்சத்தில் அந்த பணம் வருமா வராதா, நீங்கள் எந்த கிழமையில் அந்த பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கிறீர்கள், அவர்கள் அதை உங்களுக்கு திருப்பி கொடுப்பார்களா, என்ற பல கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்ட பின்பே நீங்கள் பண உதவியை செய்யவேண்டும். பாவம் பார்த்து பண உதவி செய்பவர்கள் கட்டாயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பணத்திற்கு கஷ்டப்பட்ட தான் செய்வார்கள் இதுவும் நிதர்சனமான உண்மைதான்.

savings-money

எப்போதுமே பணம் பணத்தோடு தான் சேரும். பணம் சேர வேண்டும். பணம் எனக்குத் தேவை என்ற எண்ணத்தோடு யார் இருக்கின்றார்களோ, அவர்கள் கையில் பணம் கட்டாயம் சேர்ந்துவிடும். ‘பணத்தை வைத்து என்ன சாதிக்கப் போகின்றோம்’ என்ற எண்ணம் ஒருவருடைய மனதில் கட்டாயம் வரவே கூடாது. பணம் மட்டும் தான் இந்த உலகம் என்று சொல்ல வரவில்லை. ஆனால், பணம் இல்லையேல் இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை, என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

money

இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் பணத்தை சம்பாதிக்கும் முயற்சிகளை எடுக்கும் போது, உங்களை பார்த்து யார் என்ன பேசினாலும் அதை உங்களுடைய காதில் வாங்கிக்கொள்ளாமல், உங்களுடைய முன்னேற்றத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்டே இருந்தால் பணம் உங்கள் கைக்கு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.