வீட்டில் தன தேவதை தங்க வழிபாடு

mahalakshmi ranning gold
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் பணத்தை சம்பாதிக்க படும் பாடு சொல்ல முடியாத துயரம் தான். அது ஒரு சின்ன வேலையாக இருந்தாலும் சரி பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி இத்தனை பாடுபடாமல் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடிவதில்லை. சம்பாதிக்கவே இத்தனை கஷ்டப்பட வேண்டும் என்றால் அதை தங்க வைக்க படும்பாடு அதை விட பெரிது.

பணத்தையாவது எப்பாடு பட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால் பணத்தை சேர்த்து வைப்பதற்கு நிச்சயமாக தெய்வத்தின் அனுகிரகமும் பணம் நம்மிடம் தங்குவதற்கான யோகமும் இருக்க வேண்டும். அது இல்லாது போனால் எத்தனை சம்பாதித்தாலும் கையில் தாங்காது பணம் வீட்டில் தங்க வேண்டும் எனில் அங்கு தன தேவதை வீட்டில் தங்க வேண்டும்

- Advertisement -

தன தேவதை எனில் அது யாருமில்லை மகாலட்சுமி தாயார் தான். அவர்கள் வீட்டில் நிரந்தரமாக தங்காமல் பணம் வீட்டில் தங்காது. அப்படியான தன தேவதை நம் வீட்டில் தங்க என்ன செய்ய வேண்டும். இதில் இன்னொரு கேள்வியும் உண்டு. தன தேவதை வீட்டில் ஒரு நாள் தங்கினால் மட்டும் போதுமா? அப்படியானால் இந்த பூஜையை தினம் செய்ய வேண்டுமா? எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பணம் தங்க

எல்லோர் வீட்டிலும் தினமும் தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. அப்படி ஏற்றக் கூடிய தீபத்தை இந்த முறையில் ஏற்றினால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டை விட்டு அகலாமல் நிரந்தரமாக வாசம் செய்வார். அதற்கு இந்த தீபம் ஏற்றுவதற்கு என தனியாக ஒரு மண் அகலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான செக்கிலாட்டிய நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

அந்த அகல் விளக்கில் ஆறு கற்கண்டை தூள் செய்து அந்த பொடியை எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு சிட்டிகையை மஞ்சளையும் சேர்த்து தினமும் இந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்ற வேண்டும். தினமும் ஆறு கற்கண்டு பவுடரையும் மஞ்சள் தூளையும் சேர்த்து தான் ஏற்ற வேண்டும். இதைத் தவிர்த்து நீங்கள் எப்போதும் ஏற்றும் மற்ற தெய்வங்களை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்த வேலை கிடைக்க பரிகாரம்

அதே போல் தீபாராதனை காட்டுவதற்கு நாம் எப்போதும் பயன்படுத்தும் கற்பூரத்தை பயன்படுத்தாமல், பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்த வேண்டும். தினமும் இந்த தீபமும் தூபமும் எரியும் வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்து பணமழை பொழிய செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நித்திய பூஜை வழிப்பாட்டு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருக்கு நம்பிக்கையுடன் செய்யலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -