இந்த டிப்ஸ் நீங்க தெரிஞ்சுக்கிட்டாலே போதும். உங்க கேஸ் செலவு பாதியா குறைஞ்சிடும். இனி உங்க பட்ஜெட்டில் துண்டே விழாது

- Advertisement -

பெண்களுக்கு பார்த்து பார்த்து செய்ய வேண்டிய வேலைகள் பல இருந்தாலும், அதில் முக்கியமானது சமையல் வேலை. இந்த வேலையை விட சமையல் அறையை சுத்தமாக வைத்திருப்பது, சீக்கிரமாக சமைப்பது, நேரத்தை மிச்சப்படுத்துவது, பணத்தை மிச்சப்படுத்துவது, என்று சமையல் வேலைக்குள் இத்தனை விஷயங்களை கொண்டு வந்து கவனமாக செய்ய வேண்டிய பொறுப்பும் பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது. இதற்காக தான் இந்த குறிப்புகள். இதை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். உங்கள் நேரமும் மிச்சமாகும் பணமும் மிச்சமாகும். அது என்னென்ன குறிப்பு என்பதை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

நீங்கள் எதை சமைப்பதாக இருந்தாலும் சமைக்கும் பொருளின் அளவிற்கு ஒரு மடங்கு பெரிய பாத்திரம் ஆக வைத்து சமைக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால் சமைக்கும் போது வெளியே சிந்தி பொருட்கள் வீணாகாமல் இருக்கும். அதே நேரத்தில் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் இருக்காது.

- Advertisement -

நாம் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை பால் காய்ச்சுவது. நிறைய பேர் பால் பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து கவரை கட் பண்ணி பாலை ஊற்றுவார்கள். அப்படி ஊற்றும் போது கண்டிப்பாக ஸ்டவ் மீது பால் கொட்டி காலையிலேயே அடுப்பை துடைக்கும் வேலை வந்துவிடும். அது மட்டும் இல்லாமல் பாலும் வீணாகும். அப்படி செய்யாமல் பால், தண்ணீர் எல்லாம் கிச்சன் மேடை மீது வைத்து ஊற்றிய பிறகு அடுப்பின் மீது வைக்கலாம். இதனால் பால் சிந்தி வீணாகாது. அடுப்பின் மீது வைத்து ஊற்றும் போது நாம் பால் கவரை சற்று தூக்கிப் பிடித்த நிலையில் ஊற்றுவோம். அப்போது கீழே சிந்தும் வாய்ப்பு அதிகம் கிச்சன் மேடையில் வைத்து ஊற்றும் போது நாம் கைக்கு கீழே பாத்திரம் இருக்கும் நாம் சரியாகப் பிடித்து ஊற்றலாம்.
இதனால் அடிக்கடி ஸ்டவ்வை சுத்தம் செய்ய வேண்டிய வேலை மிச்சம் ஆகும்.

அதே போல் குக்கரில் சமைக்கும் போது தான் நாம் மிகப் பெரிய சவாலையே சமாளிக்க வேண்டியது இருக்கும். எப்படி செய்தாலும் குக்கர் பொங்கி ஊத்தி வேலை வைத்து விடும். அதற்கும் இதே போன்று தான் நீங்கள் வைக்கும் பருப்பின் அளவை விட ஒரு இன்ச் தண்ணீர் அளவு அதிகமாக வைத்தால் போதும். இதனால் கேஸ் செலவும் கம்மியாகும்.சீக்கிரம் வேலையும் முடியும்.

- Advertisement -

அடுத்து இப்படி குக்கர் பொங்கி ஊத்தாமல் இருக்க நீங்கள் பருப்பை வேக வைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விடலாம். அடுத்து குக்கர் விசில் வரும் இடம், ரப்பர் கேஸ் கட், இங்கெல்லாம் லேசாக எண்ணெய் தடவி விட்டு பிறகு குக்கரை உபயோகிக்கும் போது உங்களுக்கு குக்கர் பொங்கி ஊத்தவே ஊதாது வேலையும் சீக்கிரம் முடிந்து விடும்.

எது சமைத்தாலும் நாம் சமைக்கும் பொருளை கிண்ட ஏதாவது ஒரு கரண்டியை கட்டாயம் பயன்படுத்துவோம். அந்த கரண்டியை நாம் அடுப்பின் மீது அல்லது கிச்சன் மேடை மீது வைத்து விட்டு மறுமுறை அப்படியே எடுப்போம் இதில் கிச்சன் மேடை அழுக்காகி துடைக்கும் வேலை வரும். அதே நேரத்தில் அழுக்கு இருந்தால் அதில் வைத்து அப்படியே எடுத்து சமைக்கும் போது சாப்பாட்டிலும் கிருமிகள் வர வாய்ப்பு உண்டு. எனவே எது சமைத்தாலும் உங்கள் கிச்சன் ஸ்டவ் மீது ஒரு சிறிய தட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிண்ட பயன்படுத்தும் கரண்டியை இந்த தட்டின் மீது வைக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால் துடைக்கும் வேலையும் மிச்சம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

- Advertisement -

இன்னொரு முக்கியமான குறிப்பு எது சமைக்கும் போதும் நீங்கள் மீடியம் ஃப்ளேமில் வைத்தே சமைக்க தொடங்குங்கள். நாம் நினைப்போம் ஹை ஃபிளேமில் வைத்து கொதித்த பிறகு மீடியம் ஃபிளேமில் வைத்து சமைத்துக் கொள்ளலாம் என்று ஆனால் ஹை ஃபிளேமில் வைத்து சமைக்கும் போது கேஸ் அதிகம் வீணாகும். மீடியம் ஃபிளேமில் சமைக்கும் போது கேஸ் செலவு குறைவாக இருக்கும், பொங்கி ஊற்றி அடுப்பு வீணாகாது, அதே நேரத்தில் மிதமான தீயில் இருக்கும் போது எந்த பொருள் அடிபிடிக்கும் வாய்ப்பே இல்லை. சமைக்கும் பொருளின் சுவையும் நன்றாக இருக்கும்.

அடுத்து நாம் தாளிக்கும் போது மற்ற நேரங்களில் எல்லாம் அடுப்பின் மீது படாமல் பார்த்து பார்த்து செய்தாலும் தாளிக்கும் போது கட்டாயமாக கடுகு பொரிந்த உடன் அடுப்பு முழுவதும் தெறித்து விடும். அதற்கு தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்து கடுகு போட்டவுடன் அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலை போட்டு தட்டு வைத்து மூடி விடுங்கள். சூட்டிலே அது பொரிந்துவிடும். அதே நேரத்தில் அடுப்பு முழுவதும் பரவி வீணாகாது. சுத்தம் செய்யும் வேலையும் வைக்காது.

இதையும் படிக்கலாமே: தினம் தினம் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இது போதும். இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய, அருமையான 5 ஐடியாக்கள் இதோ உங்களுக்காக.

இதுபோன்ற குறிப்புகள் எல்லாம் படிக்கும் போது மிக சாதாரண எளிமையான குறிப்புகளாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் செயல்படுத்தி பாருங்கள் உங்களுக்கு எவ்வளவு நேரம், வேலை, பணம் மிச்சமாகும் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள் . இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -