தினம் தினம் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இது போதும். இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய, அருமையான 5 ஐடியாக்கள் இதோ உங்களுக்காக.

cooker
- Advertisement -

தினம் தினம் சமைக்கும்போது பெரியதாக நமக்கு என்ன கஷ்டம் இருக்க போகுது. பால் பொங்கி வழிய கூடாது. குக்கரில் சாதம் பருப்பு பொங்கி வழிய கூடாது. கஷ்டப்பட்டு செய்யும் சில வேலைகளை சுலபமாகவும் சூப்பராகவும் செய்ய வேண்டும். அவ்வளவுதானே. அதற்கு நிறைய ஐடியாவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லத்தரசிகளின் வேலையை சுலபமாக்க எளிய குறிப்புகள் இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
பால் பொங்கி வழிவது நமக்கு பெரிய தலைவலியாக இருக்கும். பால் காய்ச்சும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விடுங்கள். குட்டியா டபரா இருந்தால் கூட போதும். அதை பால் காய்ச்சும் பாத்திரத்திற்கு உள்ளே வைத்துவிட்டு, அதன் பின்பு பாலை அந்த பால் காய்ச்சும் கிண்ணத்தில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, அடுப்பில் வைத்து காய்ச்சினால், பால் பொங்கி வழியாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு பாலை காய்ச்சும் போது பால் காய்ந்த பின்பு கொதிக்குமே தவிர பொங்கி கீழே வழிந்து அடுப்பில் ஊற்றி நமக்கு சுத்தம் செய்யும் தலைவலியை உண்டாக்காது.

- Advertisement -

குறிப்பு 2:
அடுத்தது குக்கரில் தான் இப்போது பெரும்பாலும் நாம் சாதம் வைக்கின்றோம். குக்கரில் சாதம் வைத்தால் விசில் வரும்போது சாதம் அந்த குக்கரில் அடைத்துக் கொண்டு வெடிப்பது போல நமக்கு பயம் இருக்கும். குக்கரில் அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அதில் 1 ஸ்பூனையும் போட்டு விடுங்கள். விசில் வரும்போது கூட சாதம் வெளியில் வந்து கஞ்சி தண்ணீர் வெளியில் வந்து கசகசவென்று ஆகாது. பயப்படாமலும் சாதத்தை குக்கரில் வைக்கலாம். இதே போல தான் பருப்பு வைக்கும் போதும் குக்கரில் ஒரு ஸ்பூனை போடுங்க. ஞாபகமா அரிசி பருப்பு வெந்து வந்ததும் அந்த ஸ்பூனை தனியாக எடுத்து விடுங்கள்.

குறிப்பு 3:
அடுத்து நிறைய பேர் வீட்டில் முட்டை குழம்பு அடிக்கடி வைப்பாங்க. ஆனால் முட்டையை முழுதாக குழம்பில் போட்டு வைத்தால் அந்த குழம்பில் அவ்வளவாக ருசி இருக்காது. குழந்தைகள் பெரியவர்கள் மஞ்சள் கருவை வேற சாப்பிட மாட்டாங்க. ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் உப்பு காரம் மசாலா பொடி போட்டு நன்றாக அடித்து கலந்து ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து, ஆவியில் வெந்த இந்த முட்டையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதன் பின்பு கிரேவி செய்ய குழம்பு செய்ய பயன்படுத்தினால் இந்த முட்டை மிக மிக சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் கருவை நீக்காமல் அப்படியே சாப்பிடுவார்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
சில பேருக்கு சப்பாத்தி மாவு பிசைவது என்றாலே ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒரு அகலமான பவுலில் 2 கப் கோதுமை மாவு, எண்ணெய் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக கலந்து விட்டு இதில் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து அப்படியே மூடி வைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் கையைக் கொண்டு இந்த மாவை பிசைந்தால் சப்பாத்தி மாவு கையில் ஒட்டாமல் சூப்பராக சாப்டாக பிசைந்து கிடைக்கும். பிசைந்த மாவையும் 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் சப்பாத்தி அவ்வளவு சாப்டாக கிடைக்கும்.

சப்பாத்தியை அடிக்கடி நிறைய முறை திருப்பிப் போட்டு சுடக்கூடாது. அதனால் சப்பாத்தியில் இருக்கும் தண்ணீர், அனைத்தும் ட்ரை ஆகி சப்பாத்தி ஆறிய பின்பு முறப்பாக மாறிவிடும். ஒரு பக்கம் வெந்த பிறகு சப்பாத்தியை திருப்பிப்போட்டு, மறுபக்கம் வேக வைத்து இரண்டு பக்கத்திலும் எண்ணெயை தடவி எடுத்து விட வேண்டும் அவ்வளவுதான். சப்பாத்திக்கு மாவு தேய்க்கும் போது கோதுமை மாவை தொட்டு தேய்க்காமல், மைதா மாவை தொட்டு தேய்த்தால் சப்பாத்தி சூப்பரா தேய்க்க வரும்.

இதையும் படிக்கலாமே: இப்படியும் கூட ரசம் சாதம் செய்யலாமா? உங்க வாய்க்கு எதுவுமே பிடிக்கல, ஏதாவது சுட சுட சாப்பிட்டா நல்லா இருக்கும் அப்படின்னு தோணும்போது இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க.

குறிப்பு 5:
வரப்போவது பண்டிகை காலம். அகல் விளக்கின் அடியில் முதலில் நெயில் பாலிஷை பூசி நன்றாக காய வைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த அகல் தீபத்தில் எண்ணெய் ஊற்றி ஏற்றினால் அடிப்பக்கத்தில் எண்ணெய் கசியாமல் இருக்கும்.

- Advertisement -