பன்னீர் ரோஜா செடி எல்லா காலத்திலும் கொத்துக் கொத்தாக பூத்து குலுங்க, இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க போதும். பூக்காத பன்னீர் ரோஜா செடியில் கூட கை வலிக்க பூ பறிப்பீங்க.

panner rose
- Advertisement -

ரோஜா வகைகளிலே அதிக அளவில் கொத்துக் கொத்தாக பூக்கக் கூடியது இந்த பன்னீர் ரோஸ் செடி தான். இது இப்படி பூப்பதோடு மட்டுமில்லாமல் மற்ற ரோஜா செடிகளுக்கு எல்லாம் இல்லாத வகையில் ஒரு அற்புதமான நறுமணத்தை கொடுக்கக் கூடிய அழகான செடியும் கூட. இந்த செடி சில சமயங்களில் நன்றாக வளர்ந்து ஒரு மொட்டு கூட வைக்காமல் இருக்கும். அதே நேரத்தில் வைத்த மொட்டுக்கள் பூக்காமல் உதிர்த்து விடும். இதை எப்படி சரி செய்வது என்பதை இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பன்னீர் ரோஜா செடியை பொறுத்த வரையில் குறைந்தது ஆறு மணி நேரமாவது வெயில் படும்படியான இடத்தில் தான் வைக்க வேண்டும். இந்த செடிக்கு வெயில் மிக மிக அவசியம். நிழல் பாங்கான இடத்தில் இந்த செடிகளை வைத்தால் பூக்கவே பூக்காது.

- Advertisement -

அதே போல் பூக்கள் பூத்த பிறகு பூக்களை பறிக்கும் பொழுது பூ காம்பின் அடிபுரத்தில் இரண்டு இலை, மூன்று இலை, நான்கு ஐந்து என படிப்படியாக இலைகள் இருக்கும். இதில் ஐந்து இலைக்கும் நான்கு இலைக்கும் இடையில் பூவின் காம்பை நறுக்கி எடுத்தால், அதன் பிறகு அந்த இடத்தில் அதிக கிளைகள் வைத்து பூக்கள் இன்னும் அதிகமாக பூக்கும்.

அடுத்து பூத்தவுடன் செடியில் இருப்பதை பார்க்க அழகாக இருக்கிறது என்று பலரும் பறிக்காமல் விட்டு விடுவார்கள். இப்படி செய்யவே கூடாது. பூக்களை பறித்தால் தான் அந்த இடத்தில் வேறு கிளைகள் வைத்து அதிக பூக்கள் பூக்கும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி செடிகள் மொட்டு வைத்து பூக்காமல் இருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அஸ்வினி பூச்சி தாக்குதல் இன்னொன்று பொட்டாசியம் குறைபாடு. அஸ்வினி பூச்சியின் தாக்குதல் இருந்தால் அந்த பூச்சிகள் இருக்கும் இடத்தில் நீங்கள் தண்ணீரை வேகமாக பீச்சி அடித்தாலே பூச்சிகள் மடிந்து விடும்.

அதன் பிறகு சாம்பல், வேப்பெண்ணை கரைச்சல் அல்லது இஞ்சி பூண்டு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கரைத்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி ஊற்றிலாம். அதுவும் சிறந்த பூச்சி கொல்லி தான். இந்த வழிகளில் அஸ்வினி பூச்சி தாக்குதலை சரி செய்து விடலாம்.

- Advertisement -

அடுத்து பொட்டாசியம் குறைபாடு இதற்கு வாழைப்பழம் தோலை இரண்டு நாட்கள் வரை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை செடிகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர பொட்டாசியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

இது மட்டும் இன்றி ஒரு பூ கூட பூக்காமல் இருக்கும் பன்னீர் ரோஜா செடியை பூக்க வைக்க 25 கிராம் கடுகு 25 கிராம் காய்ந்த வேர்க்கடலை இரண்டையும்  மிக்ஸியில் நல்ல பவுடராக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு மூடி போட்டு பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீரில் இந்த பவுடரை கலந்து தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை 10 பத்து நாட்கள் வரை தினமும் குலுக்கி மட்டும் வைத்து விடுங்கள்.

10 நாட்கள் கழித்து இந்த தண்ணீரில் ஒரு டம்ளர் தண்ணீருக்கு 5 பங்கு சாதாரண தண்ணீரை கலந்து ரோஜா செடிக்கு ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை மட்டும் உரமாக கொடுத்தால் போதும் பூக்காத செடிகள் கூட கொத்துக் கொத்தாக பூக்கும். இந்தத் தண்ணீரை மாதம் ஒருமுறை ஊற்றினால் கூட போதும். அவ்வளவு சக்தி மிக்க இயற்கை உரம்.

இதையும் படிக்கலாமே: இது 1 கைப்பிடி இருந்தா போதும் உங்க வீட்டு ரோஜா செடி எல்லாமே லைட்டா இல்லாம டார்க் கலர்ல இனி பூக்குமே!

பன்னீர் ரோஜா செடியை எப்படி வளர்க்க வேண்டும். அதில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது அதற்கு சிறந்த இயற்கை உரக்கரைசல் போன்றவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும். நீங்களும் இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வீட்டில் இருக்கும் பன்னீர் ரோஜா செடியில் கொத்துக்கத்தாக பூக்களை பார்க்கலாம்.

- Advertisement -