நாளை பங்குனி அமாவாசை – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு

panguni-amavasai

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருட கணக்கில் இறுதியாக வரும் மாதம் பங்குனி மாதமாகும். பங்குனி மாதம் என்பது பல ஆன்மீக திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஒரு மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்து சிறப்பானதாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் “பங்குனி மாத அமாவாசை” தினத்தின் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Amavasai Tharpanam

குளிர் காலம் முடிந்து கடும் கோடை காலம் தொடங்குவதற்கான மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதம் எப்படி தெய்வீகமான மாதமாக கருதப்டுகிறதோ, அதற்கு இணையான உன்னதம் மிகுந்த ஒரு மாதம் பங்குனி மாதம் ஆகும். மற்ற எல்லா மாதங்களை போலவே பங்குனி மாதத்திலும் அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினம் என்னென்ன செய்தால் நமக்கு மேலான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.

பங்குனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும். யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இந்த தினத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டாகும்.

Amman-temple

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமை பொங்கும்.

- Advertisement -

Hindu Marriage

பங்குனி மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் என்பதை நம்மில் பலர் முன்னமே அறிவோம். இத்தகைய சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் பித்ரு சாபம் மற்றும் குல சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்க பெறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே:
குழந்தைக்கு பேச்சு வர இக்கோயிலுக்கு செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni amavasai in Tamil. It is also called as Amavasai valipadu in Tamil or Panguni matham in Tamil or Amavasai sirappu in Tamil or Panguni matham sirappugal in Tamil.