ஓடி ஓடி உழைத்தாலும் ஒரே ரூபாய் கையில் தங்கவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் வெள்ளிக்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றினால், வற்றாத செல்வம் பெருகி கடன் இல்லாத வாழ்க்கை வாழலாம்.

panjakavya vilakku seivathu eppadi
- Advertisement -

முயற்சிகள் பல செய்தாலும் அதில் வெற்றியடைய முடியவில்லையே என்ற கவலையும், எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தமும் பலருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கோடி கோடியாக கொட்ட வேண்டாம், ஆனால் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை இருந்தால் போதும் என்று ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்குரிய ஒரு சிறப்பான பரிகாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் தீர வெள்ளிக்கிழமையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். அந்த தீபத்தின் பெயர் தான் பஞ்சாட்சர தீபம். பஞ்சகவ்ய விளக்கில் ஏற்றப்படும் தீபத்தை தான் நாம் பஞ்சாட்சர தீபம் என்று கூறுகிறோம். பஞ்சகவ்ய விளக்கு பொதுவாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இருந்தாலும் அதை நம் கைகளினால் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

- Advertisement -

பஞ்சகவ்ய விளக்கு செய்வது எப்படி?
பஞ்சகவ்ய விளக்கு எவ்வாறு செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம். இதற்கு சுத்தமான நாட்டு மாட்டு பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் போன்றவை தேவைப்படும். இதை வீட்டில் இருக்கும் பெண்கள் தான் செய்ய வேண்டும். இந்த விளக்கை திங்கள், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் செய்யலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, இவை நாட்டு மாட்டு பசுவின் பொருட்களாக இருக்க வேண்டும். அதுவே மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது. பசுவின் சாணத்தில் சிறிது கோமியம், சிறிது பால், சிறிது தயிர், சிறிது நெய் ஊற்றி நன்றாக பிணைந்து அதை நாம் ஒரு அகல் விளக்காக வடிவமைத்து, நிழலில் காயவைத்து எடுக்க வேண்டும். இந்த விளக்கு சிறியதாகவும் இருக்கலாம், பெரியதாகவும் இருக்கலாம்.

- Advertisement -

இப்பொழுது இந்த பஞ்சாட்சர தீப வழிபாட்டை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
விளக்கின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு சிறிய பித்தளை தட்டில் விளக்கை வைத்து, அந்த விளக்கில் சுத்தமான நாட்டு மாட்டு பசுவின் நெய்யை ஊற்றி, அதில் தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரியை போட்டு விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றும் விளக்கானது வடக்கு முகமாக இருக்க வேண்டும்.

அந்த விளக்கிற்கு கீழ் தலைவாழை இலையை போட்டு, 5 வாழைப்பழம், 5 ஆப்பிள், 5 ஆரஞ்சு, 5 மாதுளை, 5 பேரிச்சம்பழம் என்று வைக்க வேண்டும். பிறகு நாமும் வடக்கு நோக்கி அமர்ந்து, நம்முடைய குலதெய்வத்தை வணங்கலாம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்கலாம் அதுவும் இல்லை என்றால் மகாலட்சுமியை வணங்கலாம்.

- Advertisement -

இந்த விளக்கை ஏற்ற வேண்டிய கிழமை வெள்ளிக்கிழமை. ஏற்ற வேண்டிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது காலை 7 மணிக்குள். இந்த விளக்கை முழுமையாக எரிய விட வேண்டிய அவசியம் இல்லை. மற்ற விளக்குகளை போல சிறிது நேரம் எரியவிட்டு பிறகு அந்த விளக்கை மலை ஏற்றி விடலாம். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அதே விளக்கை உபயோகப்படுத்தி தலைவாழை இலை போட்டு மேற்கூறிய பழங்களை வைத்து வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரே மணம் குளிர்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்க இந்த ஐந்து பொருட்களை வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தானம் செய்து விடுங்கள் போதும்.

விளக்கில் ஏதேனும் விரிசல்கள் ஏற்பட்டால், புதிதாக நாம் விளக்கு தயாரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் வழிபாடு செய்யும் பொழுது, நம்முடைய தகுதிக்கு ஏற்றவாறு, எந்தவித தடங்கல்களும் இன்றி, கடன்கள் ஏதும் இன்றி, நிம்மதியுடன் வாழ்க்கையில் நடத்தலாம்.

- Advertisement -