ராமேஸ்வரம் பித்ரு தோஷ பரிகாரம்

pitru dosha pariharam in rameswaram in tamil
- Advertisement -

ராமேஸ்வரம் பித்ரு தோஷ பரிகாரம்

ஜோதிட சாஸ்திரத்தில் பலவகையான ஜாதக தோஷங்கள் குறித்து கூறப்படுகின்றன. இதில் ஒரு ஜாதகருக்கு மிகவும் பாதகமான பலன்களை தரக்கூடிய ஒரு தோஷமாக “பித்ரு தோஷம்” திகழ்வதாக கூறப்படுகிறது. இந்த பித்ரு தோஷம் நீங்க மிக சிறப்பான பரிகாரம் என்பது ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று அங்கு பித்ரு தோஷ பரிகாரம் செய்வது தான் என ஜோதிட வல்லுனர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த பித்ரு தோஷம் என்றால் என்ன? இந்த பித்ரு தோஷத்தின் அறிகுறிகள் என்ன? ராமேஸ்வரத்திற்கு சென்று பித்ரு தோஷ பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பன போன்ற பல விவரங்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பித்ரு தோஷம் என்றால் என்ன

ஒரு நபரின் ஜாதகத்தில் பித்ரு ஸ்தானமாகிய 9 ஆம் வீட்டில் இருந்து லக்னம் வரை உள்ள வீடுகளில் பாவ கிரகங்களான சூரியன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலும் அல்லது அந்த பித்ரு ஸ்தானமாகிய 9 ஆம் வீட்டில் இருந்து எண்ணினால் வருகின்ற 7 ஆம் வீட்டில் மேர் சொன்ன சூரியன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் அது பித்ரு தோஷம் கொண்ட ஒரு ஜாதகமாக ஜோதிடர்களால் கணக்கிடப்படுகிறது.

- Advertisement -

பித்ரு தோஷ அறிகுறிகள் என்ன

ஒரு நபரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் ஏற்பட்டிருந்தால் அந்த ஜாதகரின் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். அந்த ஜாதகர் இளவயதில் முறையான கல்விப் பயல இயலாத நிலை ஏற்படும். இந்த ஜாதகர் தன் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் அவதிப்படுவார். சரியான வயதில் திருமணம் ஆகாத நிலை இருக்கும்.

ஜாதகர் ஆணாக இருந்தால் அவரின் மனைவிக்கோ, ஜாதகத்திற்குரியவர் பெண்ணாக இருந்தால் அவருக்கோ திருமணம் ஆகி கருவுற்ற பிறகு எதிர்பாராத கருச்சிதைவுகள், குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலை போன்றவை ஏற்படும். உடல் நல பாதிப்புகளும் அடிக்கடி உண்டாகும்.

- Advertisement -

எதிர்பாராத செலவுகள், குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் அகால மரணம் அடைவது, வரம்புக்கு மீறிய கடன் சுமை போன்ற பல துர்பாக்கிய நிலைகள் பித்ரு தோஷம் ஏற்பட்ட ஜாதகரின் வாழ்வில் நடை பெறக்கூடிய நிகழ்வுகளாக இருக்கும் என அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் பித்ரு தோஷ பூஜை

ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று பித்ரு தோஷ பரிகாரப்பவர்கள் முதலில் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு படையல் வைத்து முறையான பூஜைகள் செய்து குலதெய்வத்திடம் மானசீகமாக அனுமதி பெற்று, அதன் பிறகு ராமேஸ்வரம் செல்வதற்கு முயற்சிகளை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு சென்று பித்ரு தோஷ பூஜை செய்ய நினைப்பவர்கள் பூஜை செய்வதற்கு 1,2 தினங்களுக்கு முன்பாகவே ராமேஸ்வரம் சென்று அங்கேயே இரவு தங்க வேண்டும்.

- Advertisement -

பூஜை செய்கின்ற தினத்தன்று அதிகாலையில் எழுந்து, ராமேஸ்வர கோயில் வளாகம் சுற்றி இருக்கின்ற 22 வகையான புனித தீர்த்தங்களில் தங்கள் அணிந்திருக்கும் உடையுடன் நீராட வேண்டும். அதன் பிறகு அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று அந்த தீர்த்தத்தில் புனித நீராடல் மேற்கொள்ள வேண்டும்.

நீராடிய பிறகு அணிந்திருந்த ஈர ஆடைகளை கலைந்து, புத்தம் புதிய தூய வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு ராமேஸ்வர கோயிலில் ராமநாத சுவாமியையும் மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும்.

ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டு முடிந்ததும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு பலர் இருப்பார்கள் அவர்களிடம் முறைப்படி கட்டணம் செலுத்தினால் பூஜை பொருட்களுடன் அவர்களே உங்களுக்குரிய பித்ரு தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்வார்கள்.

பித்ருபட்ச தினங்கள், தை அமாவாசை, மகாலய அமாவாசை போன்ற தினங்களில் ஜாதகத்தில் இருக்கும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு ராமேஸ்வரத்தில் பூஜை செய்ய நினைப்பவர்கள், முன்கூட்டியே அந்த பூஜை செய்ய பதிவு செய்து கொள்வது நல்லது.

பித்ரு தோஷம் பரிகாரம்

முற்காலத்தில் நமது முன்னோர்கள் சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் நுழைகின்ற தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்த மாதங்களின் முதல் தினத்தன்று பித்ரு தோஷ பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்வார்கள். அதன்படியே எந்த ஒரு தமிழ் மாதத்தின் முதல் தினத்திலும் செய்யலாம்.

பொதுவாக எந்த ஒரு அமாவாசை தினத்திலும் பித்ரு தோஷ பரிகாரங்கள் செய்யலாம். குறிப்பாக புரட்டாசி மாதம் வருகின்ற “மகாளய அமாவாசை” தினத்தில் பித்ரு தோஷ பரிகாரங்கள் செய்வது சால சிறந்தது என ஆன்மீகப் பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பித்ரு தோஷ பரிகாரங்களை சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை நடைபெறுகின்ற தினங்களில் ராமேஸ்வரம் சென்று செய்யலாம்.

- Advertisement -