வீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க, செல்வச் சேர்க்கை அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்

panjalogam

கோயில் என்பது எப்படி தெய்வங்கள் வாழுகின்ற வீடு ஆகிறதோ, அதேபோன்று மனிதர்கள் வசிக்கின்ற இல்லமும் தெய்வத்தின் அருள் பெற்றால் தெய்வங்கள் வாழும் கோவிலாக மாறும். இன்று மக்கள் அனைவருமே தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப சொந்த வீடோ அல்லது வாடகை வீட்டிலோ வசிக்கின்றனர். அப்படி வசிக்கும் வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, தெய்வீக சக்திகள் நிரம்பினால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வளமையான வாழ்க்கை பெற வழிவகை செய்யும். அப்படி நாம் வசிக்கும் வீடு தெய்வங்களின் அருட்கடாட்சம் பெறுவதற்கு செய்யவேண்டிய ஒரு எளிய பரிகார முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

new home

பொதுவாக நமது கோயில்களில் மூலவர் தெய்வ சிலைகள் கற் சிலையாகவும், உற்சவர் எனப்படும் தெய்வச் சிலை பஞ்ச லோகங்கள் எனப்படும் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிலைகளாக இருக்கிறது. இந்தப் பஞ்ச உலோகங்களில் தங்கம் என்பது குருபகவானின் அம்சத்தையும், வெள்ளி சுக்கிர பகவானின் அம்சத்தையும், செவ்வாய் சூரியபகவானின் அம்சத்தையும், இரும்பு சனிபகவானின் அம்சத்தையும், ஈயம் கேது பகவானின் அம்சத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

சூரியன், குரு, சுக்கிரன், சனி, கேது ஆகிய ஐந்து கிரகங்களின் அம்சம் பஞ்சலோக சிலைகளில் நிறைந்திருப்பதாலும், பஞ்சலோக சிலைகளுக்கு செய்யப்படுகின்ற அபிஷேக பொருட்களை உண்பதாலும் அவற்றை நெற்றியில் இட்டுக் கொள்வதாலும் நம்மை பீடித்திருக்கும் நோய்கள், தோஷங்கள் அனைத்தும் தீரும் என்பது அனுபவ உண்மை. இப்போதைய பஞ்சலோக தெய்வ சிலைகளை வீட்டிற்குள் வைத்து வழிபட விரும்பினால் அதற்கான முறைப்படியான பூஜைகள் தவறாமல் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. அப்படி செய்யாவிடில் வீட்டில் இருப்பவர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே தான் பஞ்சலோக தெய்வ சிலைகளுக்கு பதிலாக பஞ்சலோக நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது பல நன்மைகளை தரும்.

haya

தங்க நகை விற்பனை செய்யும் கடைகளில் பஞ்சலோக நாணயங்கள் விற்பனைக்கு கிடைக்கும். அந்த பஞ்சலோக நாணயங்களை வாங்கி வந்து, ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் வீட்டின் வாயில் படிக்கு மேலே, கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படும் போது பயன்படுத்தப்படும் அஷ்டபந்தன மூலிகை கலவையை சிறிதளவு வாங்கி வந்து, சூடாக்கி அதை வீட்டு வாயிற்படியில் மீது தடவி, இந்த பஞ்சலோக நாணயங்களை நேரான வரிசையில் ஒட்டி வைக்க வேண்டும். பஞ்சலோக நாணயங்களை ஒட்டுவதற்கு அஷ்டபந்தன மூலிகை மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, நவீன ரசாயன கலவை கொண்டு செய்யப்பட்ட ஒட்டுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஒட்டக்கூடாது.

- Advertisement -

panjalogam coins

பஞ்சலோக நாணயங்களை வீட்டு வாயிற்படியில் ஒட்டுவதால் வீட்டில் இருக்கின்ற எப்படிப்பட்ட வாஸ்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதோடு, அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். வசிக்கும் வீட்டில் அற்புதமான தெய்வீக ஆற்றல் பெருகுவதோடு, அந்த ஆற்றல் அங்கு வசிப்பவர்களின் உடல் மற்றும் மனதை மேம்படுத்தி அனைத்து நன்மைகளையும் வாழ்வில் பெறுவதற்கு உதவுகிறது. வீட்டில் இருப்பவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக நிறைவேறும். குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூடிய சீக்கிரம் சொந்த வீட்டிற்கு குடிபுகும் யோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்திகள், எதிர்மறை அதிர்வுகள் அனைத்தும் நீங்கும். மிக அதிக அளவில் செல்வச் சேர்க்கையும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
இழந்த சொத்துகளை திரும்ப பெற இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panjalogam pariharam in Tamil. It is also called as Panjalogam silai in Tamil or Veetil selvam peruga in Tamil or Dusta shakti neenga in Tamil or Selvam peruga valimuraigal in Tamil.