பாதுகாப்பு கவசமாகும் வாராகி மாலை

varahi nialai vasal
- Advertisement -

காவல் தெய்வமாக விளங்க கூடியவளாக வாராகித் தாயார் திகழ்கிறார். பஞ்சமி திதி அன்று அவதரித்ததால் இவளுக்கு பஞ்சமி திதி மிகவும் விஷேசகரமான திதியாக திகழ்கிறது. ஆதலால் தான் இந்த பஞ்சமி திதி அன்று நாம் வாராகி தாயாரை மனதார வழிபடுகிறோம். இப்படி நாம் வழிபடுவதால் நம் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட வாராகி தாயாரை நினைத்து எந்த மாலையை நிலை வாசலில் கட்டினால் வீட்டிற்கு பாதுகாப்பு கவசமாக திகழ்வாள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாராகி தாயாரை நாம் எந்தவித அப்பலுக்கும் இல்லாமல் சுத்தமான மனதுடன் வழிப்படுகிறோமோ அப்பொழுது வாராகி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் வாராகி தாயாரை நாம் வழிபடுவதால் நம்முடைய வியாபாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். விவசாயம் செழிக்கும். நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளும் தீய எண்ணங்களும் ஒழியும். வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளும் விலகும். கடன் ரீதியான பிரச்சினைகள் அகலும். இப்படி நாம் வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

நமக்கு என்ன தேவையோ அதை நாம் மனதார நினைத்து வாராகித் தாயாரை வழிபடும் பொழுது அந்த வேண்டுதல் நிறைவேறும். அந்த வகையில் நம் வீட்டிற்கு பாதுகாப்பு கவசமாக எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் நம் வீட்டிற்குள் அணுகாமல் இருப்பதற்கு வாராகி தாயாரை நினைத்து நாம் இந்த செயல்களை செய்தால் போதும்.

- Advertisement -

பஞ்சமி திதி அன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் தான் தேவைப்படும். ஒன்று சாமந்திப்பூ மற்றொன்று துளசி. முதலில் சாமந்திப்பூவை வைத்து கட்டி விட்டு அதற்கு அடுத்தார் போல் துளசியை வைத்து கட்ட வேண்டும். இப்படி மாற்றி மாற்றி வைத்து மாலையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய நிலை வாசலில் போடும் அளவிற்கு இந்த மாலையை பெரிதாக கட்டிக் கொள்ள வேண்டும். கட்டிய இந்த மாலையை வாராகி தாயாருக்கு முன்பாக பூஜை அறையில் வைத்து கொண்டு எப்போதும் போல் வாராகி தாயாரை பஞ்சமி திதியில் வழிபடுவோம் அல்லவா அதே போல் வழிபட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை முடித்த பிறகு மாலையை எடுத்துக்கொண்டு “ஓம் வாராகி தாயே போற்றி” என்று நம்முடைய கைகளில் வைத்து 108 முறை கூற வேண்டும். பிறகு வீட்டு நிலை வாசலில் இந்த மாலையை தோரணமாக கட்ட வேண்டும்.

இப்படி கட்டும் பொழுது வாராகி தாயே நீங்கள் என் வீட்டிற்கும் என் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் பாதுகாப்பு கவசமாக திகழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு கட்ட வேண்டும். பிறகு நிலை வாசலில் இருக்கக்கூடிய இந்த மாலைக்கும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இந்த மாலை வாடிய பிறகு அதை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது செடிகளிலோ போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர மாம்பூ பரிகாரம்

ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் இதே போல் நாம் மாலையை கட்டி தோரணமாக நம் வீட்டு நிலை வாசலில் போடும் பொழுது நம் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் அண்டாமல் வாராகி தாயார் நம்மை காத்து ரட்சிப்பாள்.

- Advertisement -