12 ராசியினருக்கும் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும் பரிகாரங்கள்

astrology

நாம் அனைவருமே வாழ்வில் எப்போதும் அதிர்ஷ்டங்கள் பல ஏற்பட்டு, பல வித சுகபோகங்களை அனுபவிக்க விரும்புகிறோம். சில சமயங்களில் நாம் எவ்வளவு சரியாக இருந்தாலும், துரதிர்ஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க இயலாமல் போகிறது. இந்த துரதிர்ஷ்டங்கள் நீங்கி நமது வாழ்வில் பல அதிர்ஷ்டங்கள் ஏற்பட 12 ராசியினரும் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

மிகுந்த தைரியசாலிகளான மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், நன்மைகள் பல பெறவும் தங்களின் தாய், தந்தை மற்றும் ஆன்மீக பெரியோர்களுக்கு எப்போதும் சேவை செய்து வருவது நல்லது.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

கலாரசனை மிகுந்த ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, பல அதிர்ஷ்டங்களும் நன்மைகளும் தொடர்ந்து ஏற்படுவதற்கு ஜனவரி, பிப்ரவரி போன்ற மாதங்களில் புது காலணிகள் வாங்கி அணிவதை தவிர்க்க வேண்டும். இம்மாதங்களில் புதிய காலணிகள் வாங்கி அணிவது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

மிதுனம்

midhunam

சிறந்த கணக்கிடும் திறன் கொண்ட மிதுன ராசிகாரர்கள் தங்களின் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி எப்போதும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உங்கள் வீட்டு 12 வயதிற்குட்பட்ட அல்லது மற்றவர்களின் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கடும் சொல் கூறி திட்டக்கூடாது. மேலும் அக்குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்புகளை உங்களால் முடிந்த போது வாங்கி தருவது உங்களுக்கு அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும்.

கடகம்

Kadagam Rasi

பிறரின் எண்ண ஓட்டங்களை சுலபமாக அறியும் கடக ராசிக்கார்கள் தங்களின் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உங்கள் வீட்டிலிருந்து அருகிலுள்ள கோவில்களுக்கு வழிபாடு செய்ய போகும் போது காலணிகள் அணியாமல் வெறும் கலைகளுடன் சென்று வழிபட்டு திரும்ப வேண்டும்.

சிம்மம்

simmam

யாருக்கும் அஞ்சாத மனதை கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் தொடர்ந்து அதிர்ஷ்டங்களை பெறவும், துரதிர்ஷ்டங்கள் நீங்கவும் பார்வையற்ற நபர்கள் 10 பேருக்கு ஏதேனும் ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் இனிப்புகளை உண்பதற்கு வழங்குவது உங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும் பரிகாரம் ஆகும்.

கன்னி

Kanni Rasi

புத்திசாலித்தனம் மாற்றும் சிறந்த அறிவாற்றல் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் பலவற்றை பெறுவதற்கு வருத்தத்தில் ஒரு முறை நவகிரகங்களில் சனி பகவானுக்கு “சாந்தி பரிகார பூஜை” செய்து கொள்வது நல்லது.

துலாம்

Thulam Rasi

இன்பங்கள் பலவற்றை அனுபவிக்கும் யோகம் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் வாழ்நாளில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டங்கள் பலவற்றை தொடர்ந்து பெறுவதற்கு உங்களின் மாமியார் வீட்டிலிருந்து ஒரு வெள்ளி பாத்திரத்தை அவர்கள் கையால் கொடுக்கப்பெற்று, அந்த வெள்ளி பாத்திரத்தை உங்கள் வீடுகளில் வைத்திருப்பது பல நன்மைகளை உண்டாக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் இருக்கும் துரதிர்ஷ்டங்கள் அனைத்தையும் போக்கி, எப்போதும் அதிர்ஷ்டங்களை பெற செவ்வாய் கிழமைகள் தோறும் செவ்வாய் பகவான் மற்றும் அனுமனுக்கு விருத்தம் இருந்து வழிபடுவது நல்லது.

தனுசு

Dhanusu Rasi

எல்லாவற்றையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்க தனுசு ராசியினர் தங்களின் வாழ்நாளில் துரதிர்ஷ்டங்களை முற்றிலும் நீக்கி, அதிர்ஷ்டங்கள் பல தொடர்ந்து ஏற்பட திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள ஆலயங்களுக்கு நெய், தயிர்,கற்பூரம் போன்ற பொருட்களை இறைவனின் வழிபாட்டிற்கு தனமாக தருவது சிறந்தது.

மகரம்

Magaram rasi

மனோதிடம் மிகுந்த மகர ராசியினர் தங்களின் வாழ்நாளில் துரதிர்ஷ்டங்களை போக்கி, அதிர்ஷ்டங்கள் பலவற்றை பெறுவதற்கு நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய ஆலயத்திற்கு சென்று கேது கிரக சாந்தி பூஜை செய்து கொள்வது பல நன்மைகளை தரும்.

கும்பம்

Kumbam Rasi

பிறருக்கு எப்போதும் உதவும் குணம் கொண்ட கும்ப ராசியினர் தங்களின் வாழ்நாளில் தொடர்ந்து அதிர்ஷ்டங்களை பெறவும், துரதிர்ஷ்டங்கள் நீங்க பெறவும் பொருளாதார வசதி குறைந்த மக்கள் மற்றும் கோவில்களுக்கு எண்ணெய் தானம் அளிப்பது கும்ப ராசியினரின் தோஷங்களை போக்கும் சிறந்தது பரிகாரமாகும்.

மீனம்

Meenam Rasi

ஆன்மீகம், ஞானம் போன்றவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட மீன ராசியினர் தங்களின் வாழ்நாளில் தொடர்ந்து அதிர்ஷ்டங்களை பெறவும், துரதிர்ஷ்டங்கள் முற்றிலும் நீங்க பெறவும் வீட்டின் பூஜையறையை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஆலயங்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தாங்களாக முன்வந்து செய்வது இறைவனின் பரிபூரண ஆசிகளை உங்களுக்கு பெற்று தரும்.

இதையும் படிக்கலாமே:
காகம் கரையும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi athistam or athirstam in Tamil. Mesha rasi athistam, Rishaba rasi, mithuna rasi, kadaga rasi, simma rasi, Thulam rasi, kanni rasi, Virichigam rasi, thanusu rasi, Magaram rasi, Kumbam rasi, Meenam rasi athistam in Tamil.