பண்ட் உடன் சிரித்து பேசிய ஆஸி பிரதமர்! என்ன பேசினார் தெரியுமா? வீடியோ இதோ

india

இந்திய அணி புத்தாண்டு கொண்டாட்டத்தை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் மொத்த அணியும் ஒரே சீருடையுடன் பிரதமர் மாளிகையில் விருந்துக்கு சென்றனர். அப்போது கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா மற்றும் இந்திய வீரர்கள் ஆகிய அனைவரிடமும் ஆஸ்திரேலிய பிரதமர் தனித்தனியே பேசினார். பிறகு அவர்களுக்கு சிறப்புவிருந்து பரிமாறப்பட்டது.

india 1

இந்த சந்திப்பில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அது யாதெனில் இந்திய வீரர்களை ஒருவரின் பின் ஒருவராக சந்தித்த பிரதமர் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானான ரிஷப் பண்ட் வந்ததும் அவரை பார்த்து சிரித்தவாரு பேசத்துவங்கினார். இவர்களது சந்திப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரதமர் பண்ட் உரையாடல் : பண்டினை பார்த்து நீ தானே எங்களது அணியை திட்டினாய் என்று சிரித்தவாரே கேட்டார். அதற்கு சிறிய புன்னைகையை பதிலளித்தார் பண்ட். பிறகு அவரிடம் எங்களுக்கு போட்டி என்றால் பிடிக்கும் அதனால் இரு அணிகளும் விளையாடும் போது கடினமாக விளையாடுங்கள். மேலும் இது போன்ற ஸ்லெட்ஜிங் போட்டிக்கு ஆரோக்கியமானது தான் எனவே மகிழ்ச்சியுடன் உங்களது ஆட்டத்தினை ஆடுங்கள் என்றார்.

கடந்த மூன்றாவது டெஸ்டில் பெயின் மற்றும் பண்ட் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பறிமாற்றங்களை பார்த்ததால் தான் இவ்வாறு பண்ட்டிடம் சிறிது நேரம் சிரித்தவாரே பேசினார். பிறகு உணவு உபசரிப்பு முடிந்ததும் வீரர்களுடன் ஆஸ்திரேலியா பிரதமர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதையும் படிக்கலாமே :

தோனி இந்திய அணியை என்னிடம் ஒப்படைத்த போது நான் நினைத்தது இதுதான் – கோலி நெகிழ்ச்சி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்