முன்கூட்டியே புத்தாண்டை வரவேற்ற விராட் கோலி! மனைவியுடன் உள்ள புகைப்படம் இதோ

koli 1

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியுடன் புத்தாண்டினை கொண்டாடி வருகிறார். சிட்னியில் இருந்து அவர்கள் நியூசிலாந்து சென்றுள்ளனர். உலகில் முதலில் புத்தாண்டு நியூசிலாந்து நாட்டில் தான் பிறக்கும். எனவே அதனை அனுபவிக்க அங்கு சென்ற இந்த ஜோடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

புத்தாண்டை வரவேற்ற விராட் கோலி இதனை தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மூலம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ இப்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கோலி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். தற்போது ஓர் ஆண்டு திருமண வாழ்வினை பூர்த்தி செய்த இந்த தம்பதி இந்த ஆண்டை கோலாகலமாக வரவேற்றனர்.

இந்த ஆஸ்திரேலியா தொடர் மிக பெரியது என்பதால் இதன் மத்தியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவைகளை அவர்கள் இருவரும் அங்கேயே கொண்டாடி வருகின்றனர். வரும் ஆண்டு கடந்த சில ஆண்டுகளை போலவே கோலிக்கு நன்றாக அமைய வேண்டும் என்று கோலி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அடுத்த வாரம் சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. அந்த போட்டியில் சதம் அடித்து துவங்குங்கள் என்று கோலியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

பும்ரா பந்துவீச்சை நானே எதிர்கொள்ள அஞ்சுவேன் – பிரபல இந்திய வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்