10 ரூபாய் செலவில் பப்பாளி பழம் வாங்கினால் போதும். 10 நாட்களில் முகத்தை பளிச்சென்று மாற்றி விடலாம்.

papaya face pack Tamil
- Advertisement -

பப்பாளி பழம் அழகு குறிப்புகள்

பப்பாளி பழம் என்பது வெப்பமண்டல நாடுகளில் அதிகம் விளையும் ஒரு பழவகை ஆகும். இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளி பழம் உணவாக மட்டுமல்லாமல், முக அழகை மேம்படுத்தும் அழகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பெண்களின் முக அழகை மேம்படுத்துவதற்கு பப்பாளி பழத்தை பயன்படுத்தி செய்யும் சில அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு 1 – பப்பாளி பேஸ் பேக்

சில பெண்களின் முகத்தில் இருக்கின்ற தோல் மிகவும் வறண்டு, பார்ப்பதற்கே அழகற்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். முகத்தில் இருக்கின்ற சருமம் மீண்டும் மிருதுவாகி, அழகான தோற்றம் பெற 1/2 கப் அளவிற்கு நன்கு பழுத்த, தோல் நீக்கிய பப்பாளி பழ துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு மசித்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மசித்த பப்பாளி பழத்தில் 2 டீஸ்பூன் அளவுக்கு பசும்பால் மற்றும் 1 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு மெல்லிய பேஸ்ட் பதத்தில் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த பப்பாளி பழ பேஸ் பேக்கை வறண்ட முகம் கொண்ட பெண்கள், தங்களின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தடவி கொள்ள வேண்டும். ஒரு 20 நிமிடங்களுக்குப் பிறகு இதமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொண்ட வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்வதால் வறண்ட சருமம் கொண்ட பெண்களின் முகம் நன்கு அழகாக மாறும்.

குறிப்பு 2 – முகப்பரு நீங்க பப்பாளி

பெண்கள் சிலருக்கு முகத்தில் அடிக்கடி ஏற்படும் முகப்பருகளால், அவர்களின் முக அழகு கெடும். இப்படி முகப்பருக்கள் ஏற்படுவதை தடுக்க, தோல் சீவப்பட்ட பப்பாளி பழ துண்டுகளை 1/2 கப் அளவிற்கு எடுத்து, அதை நன்கு மசித்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் சுத்தமான சந்தன பவுடர் ஆகிய பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த ஃபேஸ் பேக்கை எடுத்து முகப்பரு பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தங்களின் முகம் முழுவதும் நன்கு தடவிக்கொள்ள வேண்டும். ஒரு 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி 3 – 4 நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் பெண்களுக்கு முகப்பரு ஏற்படாமல், தடுத்து முக அழகு கூடும்.

குறிப்பு 3 – முகம் அழகு பெற பப்பாளி

முகத்தில் இருக்கின்ற சருமத்தில், நுண்ணிய துவாரங்கள் தளர்ந்து போவதால், முகத்தில் வயதான தோற்றத்தை உண்டாக்கும். இதற்கு முகத்தில் இருக்கின்ற அந்த நுண்ணிய துவாரங்களை இறுகச் செய்ய ஒரு கிண்ணத்தில் 1/2 அளவிற்கு பப்பாளி பழ துண்டுகளை எடுத்து, அதை நன்கு மசித்து கொள்ள வேண்டும். பிறகு 1 முட்டையின் வெள்ளை கருவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதை நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பார்ட்டி பங்க்ஷன் போகணும்மா முகம் பளிச்ன்னு இருக்க இனி பார்லர் போகாதீங்க. இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

பிறகு அந்த நுரை பொங்கிய வெள்ளைக் கருவை, இந்த பப்பாளி பழ மசியலுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை பெண்கள் தங்கள் முகம் முழுவதும் நன்கு தடவி, ஒரு 20 நிமிடம் வரை அப்படியே காய விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதால் பெண்களின் முகம் இளமையான தோற்றம் பெறும்.

- Advertisement -