கரு கலைப்பால் ஏற்படும் தோஷம் விலக பரிகாரம்

karukalaippu pariharam tamil

குழந்தைகள் இறைவனின் வரம். ஒரு குடும்பத்திற்கு அழகே குழந்தைகளால் தான் கூடுகிறது. பத்து மாதங்கள் ஒரு பெண் தனது கருப்பையில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பது, இறைவனை அடைவதற்கு தவமிருக்கும் முனிவரின் தவத்திற்கு இணையானதாகும். ஆனால் சில பெண்களுக்கு உடல்நலம் மற்றும் இதர காரணங்களால் கருக்கலைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அல்லது கருக்கலைப்பு செய்யும் நிலை உண்டாகிறது. கருக்கலைப்பு தானாக நிகழ்வதை விட நாமே செய்வது மனிதனை கொன்றால் ஏற்படும் “பிரம்மஹத்தி” பாவத்திற்கு நிகரானதாகும். இதற்கான சில பரிகாரங்களை இங்கு காண்போம்.

Pregnancy symptoms

கருகலைப்பால் தோஷமுண்டாகிய நபர்கள் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை வகைக்கு அரை லிட்டர் எடுத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் இவை அனைத்தையும் ஒன்றாக ஊற்றி, கலக்கி கொண்டு, அமாவாசை தினத்தன்று மாலை 5 மணிக்கு மேல் சிவன் கோவிலுக்கு சென்று, அனைத்து தெய்வங்களின் சந்நிதி மற்றும் கொடிமரம், பலிபீடம் ஆகிய அனைத்து இடங்களிலும் விளக்கேற்றி, சிவபெருமான் மற்றும் அம்மனுக்கு தேங்காய், வெற்றிலை, பழம், பாக்கு, பூ, பத்தி, சூடம் போன்ற பொருட்களை அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சித்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து செய்வது சிறப்பானதாகும்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று, அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் தலை முழுகி நீராடி, அங்கிருக்கும் நவகிரகங்களை வழிபட்டு, ஒன்பது முறை வலம் வந்து பின்பு ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதராக பெயர்கொண்டு ஸ்ரீ ராமச்சந்திரனால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட எப்படிப்பட்ட புத்திர பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும். கருக்கலைப்பு ஏற்பட்டு அல்லது செய்யப்பட்ட பிறகு மீண்டும் கருவுற நினைக்கும் பெண்கள்,தங்களுடைய குலதெய்வம் மற்றும் தங்கள் கணவன்மார்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு படையல் வைத்து பூஜை செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்ட பின்பு கருவுற்றால் எந்த ஒரு குறையின்றி குழந்தை பிறக்கும்.

Amman deepam

உங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தை பெற்ற ஏழைப்பெண்களுக்கு, அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கித் தருவது கருவை அழித்த பாபத்தை குறைக்கும். விஷேஷ நாட்களில் உங்கள் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்கள் விரும்பும் உணவு வகைகளை உண்ண கொடுத்து, அவர்கள் வயிறும் மனமும் நிறைந்து மகிழ்வதால் உங்களுக்கு இருக்கும் கருக்கலைப்பு தோஷம் நீங்கும்.

- Advertisement -

deepam

கருக்கலைப்பிற்கான பரிகாரங்கள் ஒரு புறம் இருக்க, ஒரு உயிரை கொள்வதற்கு சமமான கருக்கலைப்பை ஒரு போதும் செய்யாமல் இருப்பதே மனித வாழ்விற்கு நல்லது. ஆனால் ஒரு சிலருக்கு கரு தானாகவும் கலைகிறது. அதற்கான தீர்வு இறைவனிடம் மட்டுமே உள்ளது.

இதையும் படிக்கலாமே:
சனியால் ஏற்படும் தொல்லைகள் விலக சனி பகவான் பரிகாரங்கள்

இது போன்ற மேலும் பல பரிகாரங்கள், ஆன்மீக தகவல்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for abortion in Tamil. It is also called as abortion pariharam in Tamil. Abortion is equal to brammahathi dhosam so pariharam si must for it.