திருமண தடை விலக பரிகாரம்

Thirumanam kaikuda

உலகின் தொன்மையான பண்பாடுகளில் தமிழர் பண்பாடும் ஒன்றாகும். மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை கூறும் பல உயரிய இலக்கியங்களை கொண்டதாகும் தமிழ் மொழி. அப்படியான இலக்கியங்கள் எல்லாமே ஒரு ஆணும், பெண்ணும் இல்லறவாழ்வில் இணைந்து வாழ வேண்டும் என வலியுறுத்துகின்றன. இன்றைய காலங்களில் ஆண்ககள் மற்றும் பெண்ககள் பலருக்கும் திருமண வயதை அடைந்த பின்பும் சில காரணங்களால் அவர்களுக்கு திருமணம் நடக்காமல் காலதாமதம் ஆகிறது. திருமணம் காலதாமதம் ஆகும் நிலையை போக்குவதற்கு போக்குவதற்கு சில பரிகாரங்கள் இருக்கின்றன அவற்றை இங்கு காணலாம்.
marriage

திருமணம் நடக்க எளிய பரிகாரம்

திருமணம் காலதாமதம் ஆகும் பெண்கள் மற்றும் ஆண்கள் திருமணம் நடக்கும் வரை ஒவ்வொரு வியாழனன்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, நெய்விளக்கேற்றி “ஓம் கௌரிஷங்கராயே நமஹ” என்று 108 முறை மந்திரம் ஜெபித்து வழிபட வேண்டும். அக்கோவிலில் உள்ள குரு பகவான் சந்நிதியிலும் வழிபட வேண்டும்.

முப்பது வயதிற்கு மேலாகியும் திருமணம் தாமதமாகும் நபர்கள் தங்கள் வீட்டின் தோட்டத்தில் ஒரு வாழை மரக்கன்றை நட்டு, அதற்கு தினந்தோறும் தங்கள் கைகளால் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். இவர்கள் வியாழக்கிழமைகள் தோறும் உணவில் உப்பில்லாமல் சாப்பிடும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அன்றைய தினத்தில் பெருமாளின் படத்திற்கு முன்பு நின்று, “ஓம் ப்ரம் ப்ரஹஸ்பதாயே நமஹ” என்று மூன்று முறை கூறி வழிபட வேண்டும்.
Hindu Marriageதிருமணம் தாமதத்தை போக்க திங்கட்கிழமை தோறும் சிவன் கோவிலில், சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பசும் பால் தானமாக கொடுத்து வர வேண்டும். சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் “ஓம் பார்வதிப்பதாயே நமஹ” என்று 108 முறை ஜெபித்து வழிபட வேண்டும். கோவிலிகளில் நடக்கும் தெய்வ திருமண சடங்குகளின் போது, அத்தெய்வங்களை வழிபட திருமண தாமத தோஷங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கருகலைப்பால் ஏற்படும் தோஷம் விலக பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pariharam for marriage delay in Tamil. It is also called as delayed marriage remedies in Tamil or Delayed marriage pariharam Tamil.