- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதோல் சார்ந்த பிரச்சனை நீங்க பரிகாரம்

தோல் சார்ந்த பிரச்சனை நீங்க பரிகாரம்

- Advertisement -

தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு தரக்கூடிய இந்த பரிகாரம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மனித உடம்பில் தோல் அதிகமான இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தோலில் ஒவ்வாமையால் பல்வேறு வகையான பிரச்சனைகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு பிறக்கும் போதிலிருந்தே தோல் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு திடீரென இடையில் தான் தோல் பிரச்சினைகள் உருவாக துவங்கும். யாருக்கெல்லாம் தோல் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு? அதிலிருந்து நிவாரணம் காண என்ன பரிகாரம் செய்வது? என்பதைத் தான் தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தோல் சார்ந்த பிரச்சனைகளை உண்டு பண்ணுபவர் புத பகவான். புதன் பகவான் வலிமை இழக்கும் பொழுது ஒரு ஜாதகருக்கு தோல் சார்ந்த பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். இயற்கை சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கக் கூடிய செவ்வாய், சூரியன், சனி மற்றும் ராகு ஆகியோருடன் புதன் இணையும் பொழுது தோல் சார்ந்த பிரச்சினைகள் ஒரு நபருக்கு அதிகரிக்கிறது. தீராத தோல் வியாதிகளால் அவதிப்பட இருக்கிறது.

- Advertisement -

ராகு ஒரு மனிதருக்கு எந்த அளவிற்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது? என்பதை விவரிக்கும். இந்த கிரகங்களால் உண்டாக கூடிய தோல் நோய்கள், நீண்ட காலம் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எவ்வளவு மருத்துவரை நீங்கள் அணுகினாலும், குறுகிய காலகட்டத்திற்குள் உங்களால் அதிலிருந்து நிவாரணம் பெற்று விட முடியாது. வருடகணக்கில் தொடரக்கூடிய இந்த தோல் பிரச்சனைகளை எளிதாக சரி செய்வதற்கு ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

முதலில் புதன் வழிபாடு மேற்கொள்ளுங்கள். நவகிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய பச்சை நிற வஸ்திரம் சாற்றி தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். பச்சைப்பயிறு தானம் செய்யுங்கள். வீதியில் போர்வை இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு போர்வை தானம் செய்யுங்கள் நல்ல தீர்வு கிடைக்கும். சரும பிரச்சனைகள், பொடுகு பிரச்சனைகள், சொறி சிரங்கு போன்ற தொந்தரவுகள், அலர்ஜி பாதிப்புகள், பருக்கள், கொப்பளங்கள், கட்டிகள் போன்ற எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வேப்ப மர கொழுந்து இலைகளை பறித்து அதை நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த விழுதுடன், குண்டு மஞ்சளை கல்லில் இட்டு உரசி எடுத்து அந்த விழுதினையும் சேர்த்து பற்று போடுவது போல பிரச்சினைக்குரிய இடங்களில் போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு புதன் கிழமையிலும் இந்த பத்து போட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். பின்னர் வேப்பமர குச்சிகளை எடுத்து அதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி சந்தன, குங்குமம் பொட்டிட்டு பூஜை அறையில் வையுங்கள். தினந்தோறும் அதற்கு தீப, தூப, ஆரத்தி காண்பியுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் மூதேவி வாசம் இருப்பதை அறிய

வேப்ப கஷாயம், சுக்கு கஷாயம், துளசி கற்பூரவள்ளி கசாயம் போன்றவற்றை மாற்றி மாற்றி அனுதினமும் ஒரு வேளை மட்டும் குடித்து வாருங்கள். காரமான உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளை ஒரு மண்டலத்திற்கு (48 நாட்களுக்கு) தொடாதீர்கள். மாமிசத்தை கூட முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழிமுறையில் நீங்கள் எளிதாக உங்களுடைய நீண்ட கால தோல் சார்ந்த பிரச்சினைகளை விரட்டி அடிக்கலாம்.

சற்று முன்