சுக்கிரன் நீச்சம் பரிகாரம் | Pariharam for Sukran neecham in Tamil

Pariharam for Sukran neecham in Tamil
- Advertisement -

ஒரு நபருக்கு, அவரின் வாழ்வியல் எல்லாவிதமான இன்பங்களையும் அள்ளி வழங்கக் கூடிய கிரகமாக சுக்கிரன் கிரகம் விளங்குவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனினும் ஒரு சிலருக்கு ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சத்தன்மை அடைந்தால், அவரால் வாழ்வில் எத்தகைய இன்பங்களையும் எளிதில் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமடைந்ததால் ஏற்பட்டிருக்கின்ற தோஷம் நீங்க செய்ய வேண்டிய சுக்கிர நீச்சம் பரிகாரம் ( Pariharam for Sukran neecham in Tamil ) குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜாதக கட்டத்தில் கன்னி ராசி என்பது சுக்கிர கிரகத்திற்குரிய நீச்ச வீடு என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. எனவே ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மேற் சொன்ன கன்னி ராசியில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு சுக்கிர கிரகம் நீச்சம் அடைந்ததாக பொருள். மேலும் ஒருவர் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னத்திற்கு 6, 8, 12 ஆம் வீடுகளில் சுக்கிரன் கிரகம் இருந்தாலும் சுக்கிர கிரக நீச்சம் ஏற்படுகிறது.

- Advertisement -

சுக்கிரன் நீச்சம் ஆனால் பரிகாரம்

ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமான நிலையில் இருந்தால் சுக்கிர கிரகத்துக்குரிய நட்சத்திர தினங்களிலோ அல்லது எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வெள்ளிக்கிழமை தினத்தன்று கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், சென்னையில் இருக்கின்ற வெள்ளீஸ்வரர் திருக்கோயில் போன்ற சுக்கிர கிரக பரிகார தலங்களுக்கு சென்று, சுக்கிர பகவானுக்கு 6 தீபங்கள் ஏற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, மல்லிகை பூ, மலர் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் நீச்சம் அடைந்துள்ள சுக்கிரனால் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல் நற்பலன்கள் ஏற்படச் செய்யும்.

ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அம்பாள் கோயிலுக்கு சென்று, அம்பாளுக்கு ஆறு நெய் விளக்குகள் ஏற்றி, மொச்சை சுண்டல் கொண்ட பிரசாதம் தயாரித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதால் சுக்கிரன் நீச்சம் அடைந்த ஜாதகர்களுக்கு சுக்கிர பகவானின் நல்லருள் கிடைக்கச் செய்யும்.

- Advertisement -

வியாழக்கிழமை இரவு தூங்குவதற்கு முன்பாக 27 மொச்சை பயிர்களை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்ததும், மொச்சை பயிர் ஊற வைத்துள்ள நீரை உங்கள் வீட்டில் இருக்கின்ற நெல்லி, துளசி போன்ற செடிகளுக்கு ஊற்றிவிட்டு, அந்த மொச்சை பயிர்களை பசு மாட்டிற்கு உணவாக கொடுத்து விட வேண்டும். இதை வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே : கண்டக சனி பரிகாரம்

வெள்ளிக்கிழமைகள் தோறும் உங்கள் வீட்டின் பூஜையறையில் பச்சை வண்ண புடவை அணிந்திருக்கின்ற வகையில் இருக்கும் மகாலட்சுமி தேவி படத்தை வைத்து, வாசமிக்க மலர்களை அணிவித்து, இரண்டு நெய் தீபங்களை ஏற்றி மகாலட்சுமி ஸ்தோத்திரம் போன்ற லட்சுமிக்குரிய மந்திரங்களை துதித்து வழிபாடு செய்வதால், சுக்கிர கிரக நீச்ச தோஷம் நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படும்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்ததால் வாழ்வில் எதிர்மறையான பலன்கள் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ தினங்களில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்வதற்குரிய பால், தேன், சர்க்கரை போன்ற பொருட்களை வாங்கித் தருவதால் சுக்கிரனின் அருள் கிடைக்கும். அத்தி மரம் தலவிருச்சங்களாக இருக்கும் திருக்கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று, அத்தி மரத்திற்கு தீபம் ஏற்றி, மரத்தை 6 முறை வலம் வந்து வழிபாடு செய்வதால் சுக்கிர கிரக நீச்ச ( Pariharam for Sukran neecham in Tamil ) தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -