சால்னாவை ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க. இனி பரோட்டாக்கு சிக்கன் குருமாவே இருந்தா கூட இந்த சால்னாவை தான் சைடிஷ் ஷா கேப்பாங்க.

- Advertisement -

இட்லி தோசை என்றால் சாம்பார், சட்னி,பூரி என்றால் கிழங்கு, இப்படி ஒவ்வொரு சமையலுக்கும் அதற்கான சைட் டிஷ் இருந்தால் தான் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் பரோட்டாவை பொறுத்த வரையில் எப்போதுமே சால்னா தான் அதற்கு சரியான சைடிஷ். அது எந்த வகை சால்னாவாக இருந்தாலும் சரி. இந்த சால்னாவையே பல வகையில் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் பரோட்டாவிற்கு ஏற்ற எம்ட்டி சால்னா எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பரோட்டா எம்டி சால்னா செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 3, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, சோம்பு – 2 டீஸ்பூன், முந்திரி – 5, கல்பாசி – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 5, கிராம்பு -5,பட்டை- 2, பிரியாணி இலை – 2, மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன், தனியாத் தூள் – 1டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் -1/4 டேபிள் ஸ்பூன், உப்பு -1 ஸ்பூன், தேங்காய் துருவியது -4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி புதினா – 1 கைப்பிடி.

- Advertisement -

பரோட்டா எம்ட்டி சால்னா செய்முறை:
எம் டி சால்னா செய்ய முதலில் மசாலாவை அரைத்து கொள்வோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, இரண்டு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வெந்தவுடன் அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை கல்பாசி எல்லாம் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இவையெல்லாம் வதங்கிய பிறகு துருவிய தேங்காயும், முந்திரியும் சேர்த்து வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு, இதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து, அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அதே மிக்ஸி ஜாரில் இரண்டு தக்காளி பழத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து மீதி இருக்கும் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் சோம்பு, பட்டை பிரியாணி இலை சேர்த்து பொரிந்த உடன் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் சிவந்து வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து இதையும் பச்சை வாடை போகும் வரை வதைக்கி கொள்ளுங்கள். இவை வதங்கிய பிறகு அரைத்து வைத்த தக்காளியும் சேர்த்து அதையும் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து விட்டு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு அரைத்து வைத்து மசாலாவையும் இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து அதன் பிறகு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக புதினா கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து விட்டு சால்னாவை இறக்கி வைத்து விடுங்கள். பரோட்டா எம்ட்டி சால்னா ரெடி.

இதையும் படிக்கலாமே: இரண்டு மடங்கு இரும்புச் சத்தை இன்ஸ்டன்டாக தரும் 2 சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக. பத்து இட்லி, பத்து தோசை வைத்தாலும் இந்த சட்னி ருசிக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

இது பரோட்டாவுக்கு மட்டும் இல்லாமல் பூரி சப்பாத்தி நான் இட்லி தோசை புலாவ் என்று அனைத்திற்குமே இது நல்ல சைடு டிஷ். இந்த சால்னாவை நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -