- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இரண்டு மடங்கு இரும்புச் சத்தை இன்ஸ்டன்டாக தரும் 2 சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக. பத்து...

இரண்டு மடங்கு இரும்புச் சத்தை இன்ஸ்டன்டாக தரும் 2 சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக. பத்து இட்லி, பத்து தோசை வைத்தாலும் இந்த சட்னி ருசிக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

- Advertisement -

அருமையான இரண்டு சட்னி ரெசிபிகள். வார இறுதியில் பிரிட்ஜில் கருவாப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா, மீதம் இருக்கிறதா. யோசிக்கவே யோசிக்காதீங்க. இந்த சட்னியை செய்து சாப்பிடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருவேப்பிலை கொத்தமல்லி தழை புதினாவை வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான இரும்பு சத்து பெற, ரத்த சோகையை சரி செய்ய, இந்த மூன்று கீரை வகைகளும் நமக்கு நிச்சயமாக பயன்படும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.

கதம்ப சட்னி செய்முறை:
முதலில் ஒரு கைப்பிடி அளவு புதினா, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றும் சரிசமமான அளவு இருக்கட்டும். தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து வறுக்க வேண்டும். அது பாதி வறுபட்டு வந்தவுடன், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, வரமிளகாய் 3, தேங்காய் துருவல் 2 கைப்பிடி, போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், சேர்த்து சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, தழைகளை இதோடு சேர்த்து இரண்டு நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள்.

அடுப்பை அணைத்துவிட்டு இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அரைத்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு எப்போதும் போல கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, தாளித்து போட்டுக் கொண்டால் அசத்தலான ஆரோக்கியம் தரும் கதம்ப சட்னி தயார். பார்ப்பதற்கு இது பச்சை நிறத்தில் அழகாக இருக்கும்.

- Advertisement -

தக்காளி புதினா சட்னி செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடலைப்பருப்பு 2 ஸ்பூன், வரமிளகாய் 3, போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெயை வடித்து எடுங்கள். கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும். அதில் மீடியம் சைஸ் நறுக்கிய வெங்காயம் 1, தோலுரித்த பூண்டு பல் 2, பச்சை மிளகாய் 2, காரத்திற்கு ஏற்ப போட்டு வதக்குங்கள். (இந்த சட்னிக்கு வர மிளகாய் பச்சை மிளகாய் இரண்டும் சேர்த்து அரைத்தால் ருசி அதிகம்.)

இதையும் படிக்கலாமே: அட்டகாசமான சுவையில் ஐந்தே நிமிடத்தில் பீட்ரூட் துவையல் எப்படி செய்வது? காரசாரமும், இனிப்பும் கலந்த வித்தியாசமான துவையல் ரெசிபி இதோ உங்களுக்காக!

வெங்காயம் வதங்கி வந்ததும் மீடியம் சைஸில் இருக்கும் 2 தக்காளி பழங்களை வெட்டி போட்டு, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, போட்டு வதக்க வேண்டும். தக்காளி இரண்டு நிமிடம் நன்றாக வதங்கட்டும். குழைய குழைய தக்காளி வதக்க வேண்டாம். இறுதியாக புதினா 2 கைப்பிடி போட்டு, ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு ஓரளவுக்கு திக்காக இந்த சட்னியை அரைத்து, தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி தாளிப்பு போட்டால் சூப்பரான மணக்கும் வாசனையில் புதினா சட்னி தயார். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்