அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான பருப்புப் பொடியை சுலபமாக அரைப்பது எப்படி. சுடச்சுட சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்ளோ அருமையா இருக்கும்.

paruppu-podi
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு பருப்பு பொடி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடசுட வெள்ளை சாதத்தில் இந்தப் பொடியை போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். பக்குவமாக எந்தெந்த பருப்பு வகைகளை சேர்த்து, பருப்புகளை பக்குவமாக எப்படி வறுத்து அரைத்தால், இந்த பருப்பு பொடி நமக்கு சூப்பரா கிடைக்கும் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முதலில் இந்த பருப்பு பொடி அரைக்க தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை – 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், பூண்டு – 10 பல், உப்பு தேவையான அளவு, வர மிளகாய் – 12, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை – 4 கொத்து, நெய் – 1 ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை எடுத்து வாயில் போட்டால் கடித்து சாப்பிடும் பக்குவம் வரும் வரை வறுக்கவும். எல்லா பருப்புகளும் பொன்னிறமாக வறுபட்டதும், வாயில் போட்டு பாருங்கள். அது சாப்பிடுவதற்கு நறநறவென இருந்தால் அந்த பருப்பு சரியான அளவில் வரப்பட்டு உள்ளது என்று அர்த்தம்.

paruppu-podi1

அடுத்தபடியாக அதே கடாயில் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வரமிளகாயை, போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இறுதியாக 4 கொத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து இந்த பொருட்களையும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

இப்போது அதே கடாயில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு அதில் தோலுடன் இடித்த பூண்டு பல்லை போட்டு பொன்னிறமாக வறுத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக அதே கடாயில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (வறுக்க கூடிய எல்லா பொருட்களையும் ஒரே தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளலாம்.)

இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருக்கும் சூட்டிலேயே பொட்டுக்கடலையை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லா பொருட்களும் முதலில் நன்றாக ஆற வேண்டும். ஆறிய இந்த எல்லா பருப்பு வகைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

paruppu-podi2

அரைத்த இந்தப் பொடியை அப்படியே டப்பாவில் ஸ்டோர் செய்து சாப்பிட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சல்லடையில் சலித்து எடுத்தால் இந்தப் பொடி மிகவும் நைசாக நமக்கு கிடைக்கும். உங்கள் விருப்பம் போல சலித்தும் இதை நீங்கள் பயன்படுத்தலாம். சலிக்காமலும் இந்த பொடியை நீங்கள் சாப்பிட பயன்படுத்திக் கொள்ளலாம்.

paruppu-podi3

அட்டகாசமான மணக்க மணக்க ஒரு பருப்பு பொடி தயார் ஆகிவிட்டது. காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது எடுத்து இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

parupu-podi1

பின்குறிப்பு: இந்த பருப்பு பொடி அரைக்க பயன்படுத்தப் போகும் பருப்பு வகைகளை எல்லாம் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு வறுக்க வேண்டும். கருகி போய்விடக் கூடாது. அதே சமயம் வறுபடாமலும் இருக்க கூடாது. வறுக்கும் போது இதில் பக்குவம் தவறினால் பருப்பு பொடி சுவை நிறம் இரண்டுமே மாறிவிடும். பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -