உங்களுடைய பர்ஸில் இந்தப் பொருளை, இப்படி வைத்திருந்தால் பணம் பல மடங்கு விரையம் ஆகத்தான் செய்யும்.

purse-money

நம்மில் பல பேரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் மணி பர்ஸ் கட்டாயம் இருக்கும். பணம் இல்லாத பர்ஸை கூட, ராசியான பர்ஸாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றித் தான், இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த நிறத்தில் பர்ஸை வைத்துக் கொள்ள கூடாது. எந்த நிறத்தில் மணி பர்ஸை வாங்கி வைத்துக்கொள்ளலாம். பணத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களை சரியான முறையில் எப்படி பர்ஸில் வைத்தால் பணம் நம்மைத் தேடி வரும் என்ற சின்ன சின்ன விஷயங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

purse

முடிந்தவரை உங்களுடைய பர்சை கருப்பு நிறத்தில் வாங்காமல் இருப்பது நல்லது. கருப்பு நிறம் அல்லாத பிங்க் நிறம், பச்சை நிறம், கோல்டன் கலர், சில்வர் கலர் இப்படிப்பட்ட பர்ஸை வாங்கினால் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். கூடவே அந்த மணி பர்ஸ் எந்த ஒரு உயிரினத்தையும் அழித்து செய்த லெதர் பரிசாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எது எப்படியாக இருந்தாலும், ஒருவருக்கு சுக்கிரனின் அனுக்கிரகம் இருந்தால் மட்டும் தான் அவர்களுடைய மணிபர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். சுக்கிரனின் அருள் பெற்று தரக்கூடிய ஏலக்காயை நிறைய பேர், தங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்வார்கள். இருப்பினும் அவர்களுக்கு பணம் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்?

purse

உங்களுடைய பரிகாரம் முழுமை அடையவில்லை என்பது ஒன்று மட்டும் தான் காரணம். தினமும் காலையில் எழுந்து சுக்கிர பகவானை மனதார நினைத்து குளிக்கும் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு அதன் பின்பு நீங்கள் குளிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். அதாவது நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரே ஒரு ஏலக்காயை, தட்டி போட்டு விடுங்கள். 1/2 மணி நேரம் அந்த ஏலக்காய் அந்தத் தண்ணீரிலேயே நன்றாக ஊறிய பின்பு ஏலக்காயின் வாசம் தண்ணீரில் இறங்கி இருக்கும். அந்த தண்ணீரில் தினம் தோறும் நீங்கள் குளித்து வந்தால், உங்களுக்கு சுக்கிரனின் அம்சம் கிடைக்கும்.

- Advertisement -

இதோடு சேர்த்து ஏலக்காயை மணிபர்சில் வைக்கும் போது முழு ஏலக்காய் ஆக வைக்கக்கூடாது. ஏலக்காயை கொஞ்சமாக பிரித்து விட்டு, அதாவது உள்ளே இருக்கும் பருப்பு, அந்த கருப்பு நிற விதையானது, வெளியே தெரிய வேண்டும். அப்போதுதான் வாசனை அதிகமாக வெளியாகும். இப்படி இருக்கும் ஏலக்காயை ஒரு மஞ்சள் நிற துணியில் மடித்து, உங்களுடைய பர்ஸில் வைத்துப் பாருங்கள். பணம் வைக்கும் பெட்டியில் முழு ஏலக்காயை வைத்தால், பலன் குறைவாகத்தான் இருக்கும். ஏலக்காயை தட்டி வைத்து பாருங்கள்.

Elakkai

இதோடு அல்லாமல் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று பழைய ஏலக்காயை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டோ  அல்லது காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டு விட்டோ மீண்டும் புதிய ஏலக்காயை வைக்க வேண்டும், என்பதை நீங்கள் கவனித்து வர வேண்டும். காய்ந்துபோன வாடிய ஏலக்காய் உங்கள் பர்ஸில் இருந்தாலும், உங்களிடத்தில் பணம் வீண் விரயம் ஆகும்.

gift1

இதோடு சேர்த்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு உங்களுடைய கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது நண்பர்களுக்கு குழந்தைகளுக்கு அல்லது எந்த உறவினர்களாக இருந்தாலும் சரி, அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்றால், பணம் சேமிக்கக்கூடிய உண்டியல், பணத்தை சேமித்து வைக்கக்கூடிய பர்ஸ், மணி பிளான்ட் இப்படிப்பட்ட பொருட்களை நல்ல மனதோடு அன்பளிப்பாகக் கொடுத்தால், அன்பளிப்பு கொடுப்பவர்களுக்கும் இதனால் நன்மையே நடக்கும். அன்பளிப்பு பெறுபவர்களுக்கும் இது நன்மையை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும்! வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.