பாசிப்பருப்பு இருந்தா இட்லி, தோசைக்கு இப்படி மாவு தயாரிச்சு பாருங்க மொறுமொறுன்னு கிரிஸ்ப்பியான ஹெல்த்தி தோசை இன்ஸ்டன்ட்டாக ரெடி!

pasi parupu dosai
- Advertisement -

மொறுமொறுன்னு இந்த பாசி பருப்பு தோசை ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். இட்லி, தோசைக்கு எப்ப பார்த்தாலும் அரிசி, உளுந்து ஊற வைக்காமல் இது போல வேறு வழிகளில் நீங்கள் மாவு தயாரிக்கலாம். அதிலும் பாசிப்பருப்பு தோசை ரொம்ப சுவையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் பாசிப்பருப்பு ஊற வைத்து உடனே தோசை சுட்டுப் பாருங்க ,உங்களுக்கும் ரொம்ப பிடித்துப் போகும். ஹெல்த்தியான பாசிப்பருப்பு தோசை மாவு எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – இரண்டு கப், அரிசி மாவு – அரை கப், தண்ணீர் – 3/4 கப், உப்பு – தேவையான அளவு, சோடா உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

பாசிப்பருப்பு இரண்டு கப் அளவிற்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து அலசிக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்கு ஊறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி ஜாரில் ஊறிய பாசிப்பருப்பை சேர்த்து அதனுடன் கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு சேர்த்ததும் அதனுடன் அரை கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த மாவை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின் கால் ஸ்பூன் அளவிற்கு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உடனடியாக தோசை சுட வேண்டும் என்பதால் அது புளித்திருக்காது எனவே சோடா உப்பு சேர்த்து செய்வது நல்லது. உப்பு சேர்த்ததும் மீதம் இருக்கும் கால் கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு சரியாக கரைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் கெட்டியாக இல்லாமல், ரொம்பவும் நீர்க்க இல்லாமல் தோசை மாவு எப்படி இருக்குமோ, அதே அளவிற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இப்பொழுது தோசை மாவு ரெடி! தோசை கல்லை அடுப்பில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். கல் காய்ந்ததும் ரெண்டு கரண்டி மாவை ஊற்றி நன்கு மெல்லியதாக எவ்வளவு பெரிதாக பரப்ப முடியுமோ அவ்வளவு பெரிதாக பரப்பிக் கொள்ளுங்கள். இதை சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் நன்கு மொறுமொறுவென்று வந்ததும் அப்படியே சுருட்டி எடுத்து தட்டில் வைத்து சாப்பிட வேண்டியதுதான்.

இதையும் படிக்கலாமே:
எதையும் வதக்க வேண்டாம் உடனடியாக 2 நிமிடத்தில் அருமையான பச்சை சட்னி இட்லி, தோசைக்கு எப்படி தயார் செய்வது?

இந்த தோசை மாவுக்கு மீது பரப்ப கொஞ்சம் மிளகாய் தூளை எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிறிய பௌலில் வெறும் மிளகாய் தூள் போட்டு அதில் சமையல் எண்ணெயை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தோசையை பரப்பிய பின்பு சில நிமிடங்கள் கழித்து இந்த மிளகாய் தூளை பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு நன்கு வெந்து வந்ததும் எடுத்து விடுங்கள். பாசிப்பருப்பு தோசைக்கு இந்த மிளகாய் பொடி ரொம்பவே சூப்பராக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -