எதையும் வதக்க வேண்டாம் உடனடியாக 2 நிமிடத்தில் அருமையான பச்சை சட்னி இட்லி, தோசைக்கு எப்படி தயார் செய்வது?

green-kotha-malli-chutney
- Advertisement -

காலையில் எழுந்ததும் சட்னி செய்ய வேண்டும் என்றாலே நமக்கு கடுப்பாக இருக்கும். என்னடா சட்னி வைப்பது? என்று யோசித்து யோசித்து போரடித்து போனவர்களுக்கு, இந்த ஒரு சட்னி வரப் பிரசாதமாக இருக்கும். எந்த ஒரு பொருட்களையும் இதில் நாம் வதக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்ஸ்டன்டாக மிக்சியில் அரைத்து தாளிச்சு செய்யக்கூடிய இந்த பச்சை சட்னியை எப்படி செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு இன்ச், பச்சை மிளகாய் – இரண்டு, தக்காளி – ஒன்று, புளி – சிறு நெல்லிக்காய் அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பூண்டு – நாலு பற்கள்.

- Advertisement -

செய்முறை

பச்சை சட்னி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்கு சுத்தம் செய்து முழுதாக அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லியை சுத்தம் செய்து போட்டுக் கொள்ளுங்கள்.

கொத்தமல்லியை பாதி அளவிற்கு காம்புடன் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேருங்கள். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மீடியம் சைஸ் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கி சேருங்கள்.

- Advertisement -

சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எதுவும் இல்லாமல் சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு கொஞ்சம் போல உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னியை வதக்க வேண்டிய அவசியம் இல்லை, இதை பச்சையாகவே சாப்பிடலாம். இந்த சட்னியுடன் இப்பொழுது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இட்லி சாப்பிடணும்னு ஆசைப்பட்டா அரிசி உளுந்து ஊற வச்சு அரைச்சு புளிக்க வைச்சி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. வெறும் இருபது நிமிஷம் போதும் நல்ல மல்லிப்பூ போல சாப்டான இட்லி ரெடி.

தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் நாலு பூண்டு பற்களை தோலுடன் அப்படியே தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை சட்னியில் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கக் கூடிய இந்த பச்சை சட்னியை நீங்கள் மொறு மொறுன்னு தோசை மற்றும் மிருதுவான இட்லியுடன் சுடச் சுட தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இதே போல வீட்டில் நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -