அரை கப் பாசிப்பருப்பு இருந்தா இப்படி மொறு மொறுன்னு கிரிஸ்ப்பியா போண்டா செஞ்சு கொடுங்க. இதை நீங்க எவ்வளவு செஞ்சாலும் பத்தாது

moong dal bonda
- Advertisement -

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் ஏதாவது சாப்பிட கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் அதை ஓரளவிற்கு ஆரோக்கியமானதாகவும் நாம் செய்து கொடுக்க வேண்டும். கடைகளில் விற்கும் ஸ்னாக்ஸ் வகைகளை வாங்கிக் கொடுப்பதால் எந்த வித நன்மையும் இல்லை என்பதை விட தீமைகளை அதிகம். ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு எளிமையான ஸ்நாக்ஸ் அதே நேரத்தில் மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு -1/2 கப், காய்ந்த மிளகாய் -5, சோம்பு -1 டேபிள் ஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை கொத்தமல்லி – 1 கொத்து எண்ணெய் பொரித்தெடுக்க தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

இந்த போண்டா செய்வதற்கு அரை கப் பாசிப்பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் பொடித்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஊறிய பாசிப்பருப்பை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு இத்துடன் சேர்த்து சற்று கொரகொரப்பாக லேசாக மட்டும் தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த பாசிப்பருப்பில் ஒரு பவுலுக்கு மாற்றிய பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மீடியம் பிளேமிற்கு மாற்றி வைத்து நாம் தயார் செய்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு போண்டாக்களாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த போண்டாவை எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து லேசாக இருபுறமும் திருப்பிப் போட்டு சிவந்து வந்த பிறகு எண்ணையும் சலசலப்பும் அடங்கியதும் எண்ணெயிலிருந்து போண்டாவை எடுத்து விடுங்கள். சுவையான பாசிப்பருப்பு போண்டா அரைமணி நேரத்தில் தயார். இந்த போண்டாவை சுட்டு வைத்து விட்டால் குழந்தைகள் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: பாசிப்பருப்பு இருந்தா இட்லி, தோசைக்கு இப்படி மாவு தயாரிச்சு பாருங்க மொறுமொறுன்னு கிரிஸ்ப்பியான ஹெல்த்தி தோசை இன்ஸ்டன்ட்டாக ரெடி!

இந்த போண்டாவை செய்வது மிக மிக எளிமை. அத்துடன் இதற்கு சேர்க்கும் பொருள்களும் மிகவும் குறைவு. நம் வீட்டில் எப்பொழுதும் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து தான் இதை செய்கிறோம். அது மட்டும் இன்றி இது போல எளிமையான உணவுகளை நாம் செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு எந்த வித ஆரோக்கியக் கேடும் வராது.

- Advertisement -