பாதங்களில் உள்ள வெடிப்பை இனி நீங்கள் மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரே வாரத்தில் செலவே இல்லாமல் பாத வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இதோ சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

பெரும்பாலும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சம் கூட பாதத்திற்கு கொடுப்பது கிடையாது. பாதத்தில் வெடிப்பு வந்து அதிகமாகி, அதில் இருந்து ரத்தம் வந்து வலியும், வேதனையும் வரும் வரையில் அதை கண்டு கொள்வதே கிடையாது. பாதத்தை முறையாக பராமரித்தாலே இந்த பிரச்சனைகள் வராது. அப்படி பாதங்களில் வெடிப்பு வந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

பாதங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டாலே பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து விடலாம். அது மட்டுமின்றி நம் உடம்பில் பித்தம் அதிகமானாலும் அல்லது உடலில் தண்ணீரின் அளவு குறைந்து விட்டாலும் பாதங்களில் வெடிப்புகள் தோன்ற வாய்ப்புகள் அதிகம். முதலில் இப்படி பாத வெடிப்புகள் வராமல் இருக்க என்ன செய்வது என்பதை தெரிந்து அதன்படி செயல்படுவது நல்லது. இப்போது வந்த பாத வெடிப்பை சரி செய்யக் கூடிய அந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் ஆலிவ் வேரா ஜெல், இவற்றுடன் அரை எலுமிச்சை பழச்சாறு மூன்றையும் நன்றாக பேஸ்ட் போல குழைத்து கொள்ளுங்கள்.பாத வெடிப்பை சரி செய்யும் பேஸ்ட் தயாராகி விட்டது.

இரவு தூங்குவதற்கு முன்பாக, வெதுவெதுப்பான உப்பு கலந்த தண்ணீரில் உங்கள் பாதங்களை ஐந்து நிமிடம் வைத்திருங்கள். அதன் பிறகு பாதங்களை துணி வைத்து நன்றாக துடைத்த பிறகு நீங்கள் தயார் செய்து வைத்து அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்த்து அதை அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் பாதத்தை சுத்தமாக துடைத்து விட்டு, அதன் பிறகு அந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொடுங்கள். பாத வெடிப்பை சரி செய்ய இந்த முறை பெரிதும் உதவி செய்யும்.

- Advertisement -

இந்த பாத வெடிப்பை சரி செய்ய இதை விட ஒரு எளிய வழியும் உள்ளது. அதற்கு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவிய பிறகு அதை அரைத்து உங்கள் பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்தில் பத்து போடுவதை போல போட்டு விடுங்கள்.

இதுவும் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் இதை சுத்தமாக துடைத்து விட்டு, தேங்காய் எண்ணெய் வைத்து பாதத்தை மசாஜ் செய்து கொடுங்கள். இந்த முறையிலும் பாத வெடிப்பை சரி செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: 10 வயதை பட்டுன்னு குறைக்க, 10 லவங்கம் இருந்தால் போதும். பல வருடங்கள் கடந்தாலும் நீங்கள் ஸ்வீட் 16ஆக இருப்பீர்கள்.

இவை மிகவும் எளிமையான முறைகள் தான். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தாலே உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைய தொடங்கி விடும். அதன் பின் வெடிப்புகள் இல்லாமல் பாதம் மென்மையாக மாறுவதை நீங்களே காண்பீர்கள்.

- Advertisement -