மென்மையான பட்டு போன்ற பாதங்கள் பெற நூற்றுக்கணக்கில் செலவு செய்து பெடிக்யூர் செய்யணுமா என்ன? வீட்டிலேயே 10 பைசா செலவில்லாமல் செய்யலாமே!

pedicure-lemon-salt
- Advertisement -

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், பாதங்களுக்கு யாருமே கொடுப்பது கிடையாது. பாதங்கள் மென்மையாக பட்டு போல மிருதுவாக இருக்க நூற்றுக்கணக்கில் செலவு செய்து பார்லருக்கு போய் பெடிக்யூர் செய்து கொள்வது உண்டு. 10 பைசா செலவில்லாமல் இந்த பெடிக்யூரை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்து கொள்வது? என்கிற அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

பெடிக்யூர் செய்வதற்கு வீட்டில் இருக்கும் சில குறிப்பிட்ட பொருட்கள் போதும்! பெரிதாக காசு கொடுத்து எதையும் வாங்குவதற்கு தேவையில்லை. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வெதுவெதுப்பாக சுட வைத்துக் கொள்ளுங்கள். கை பொறுக்கும் சூட்டில் இருக்கக் கூடிய இந்த வெதுவெதுப்பான தண்ணீருக்குள் ஒரு பாக்கெட் ஷாம்பூவை அப்படியே சேருங்கள்.

- Advertisement -

எந்த வகை ஷாம்பூவாக இருந்தாலும் பரவாயில்லை. ஷாம்பூ சேர்த்ததும் நன்கு கலந்து விடுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் கடைசியாக ஒரு எலுமிச்சையை ரெண்டாக வெட்டி அதில் பாதி அளவிற்கு சாறு எடுத்து இதனில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கால்களை 10 நிமிடம் வெதுவெதுப்பான இந்த தண்ணீரில் வைக்க வேண்டும்.

கால்களில் இருக்கக்கூடிய இறந்த செல்கள், அழுக்குகள் எல்லாம் இந்த ஷாம்பூ கலந்த நீரில் நன்கு இறங்க ஆரம்பிக்கும். அதன் பிறகு ஒரு சிறிய அளவிலான பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீதமிருக்கும் பாதி எலுமிச்சையின் சாற்றையும் சேர்த்து, அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையல் சோடா எனப்படும் பேக்கிங் சோடா கலந்து கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்ததும் ஒரு ஷாம்பூவை முழுமையாக அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய்க்கு ஷாம்பூ வாங்கினால் கூட போதும்.

- Advertisement -

பின்னர் இதை பேஸ்ட் போல நன்கு பிரஷ் கொண்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பழைய டூத் பிரஷ் ஏதாவது இருந்தால் நீங்கள் உபயோகிக்கலாம். பின்னர் இதை பாதம் முழுக்க நன்கு தேய்த்துக் கொடுக்க வேண்டும். அந்த பிரஷ்சை கொண்டு பாதத்தை தேயுங்கள். எலுமிச்சையின் மூடியையும் நீங்கள் உபயோகப்படுத்தலாம். எலுமிச்சையின் மூடியை கொண்டு நன்கு பாதம் முழுக்க எல்லா இடங்களிலும் தேய்த்து கொடுங்கள்.

விரல்களின் இடுக்குகளில் கூட எலுமிச்சை தோல் மற்றும் டூத் பிரஷ் வைத்து தேய்த்து விடுங்கள். நகங்களின் இடுக்குகளில் கூட டூத் பிரஷை கொண்டு தேய்க்க வேண்டும். இது போல செய்து விட்டு தண்ணீரில் நன்கு கால்களை அலசிக் கொள்ளுங்கள். பின்பு புதிதாக மீண்டும் ஒரு பிரெஷ் ஆனா தண்ணீரில் கால்களை நனைத்து கழுவி கொள்ளுங்கள். நன்கு கழுவியதும் ஒரு மெல்லிய டவல் கொண்டு கால்களை மென்மையாக துடைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அழகு நிலையம் போகாமலே நீங்க அழகு தேவதையா ஜொலிக்க வேண்டுமா? இதோ இந்த பேக் போட்டாலே போதும். நீங்க அழகு நிலையம் போனதில்லை என்று சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. அவ்வளவு அழகா மாறிடுவீங்க

பரபரவென்று அழுத்தி துடைக்க கூடாது. மெதுவாக ஒற்றி எடுத்த பின்பு, ஏதாவது ஒரு மாயிஸ்ரைசர் லோஷன் இருந்தால் தடவிக் கொள்ளுங்கள். எதுவும் இல்லை என்றால் தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இதே போல நீங்கள் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் கூட, உங்களுடைய பாதங்கள் எப்பொழுதும் மிருதுவாக, மென்மையாக இருக்கும். மேலும் பாதவெடிப்புகள் கூட தோன்றாது, மறையும்.

- Advertisement -