இனி உங்க பாதமும் குழந்தைகளின் பாதங்களை போல மெருதுவாக இருக்க வேண்டுமா? பஞ்சு போன்ற பாத அழகை பெற இதை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள்.

foot remedies
- Advertisement -

குழந்தைகளின் பாதங்களை பார்க்கும் போது நமக்கே அவ்வளவு ஆசையாக இருக்கும். தொட்டுப் பார்த்தால் பஞ்சு போல மெருதுவாக இருக்கும். இதே போன்ற பாத அழகை பெரியவர்களும் பெற முடியும். அதற்கு ஒரு சில வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். முகம் அழகாக இருக்க மெனக்கெடும் நாம் அதே அளவு முக்கியத்துவத்தை பாதத்திற்கும் கொடுக்க வேண்டும். இப்போது இந்த அழகுக் குறிப்பு பதிவில் பாதங்களை நாம் எப்படி பராமரிப்பது எப்படி என்பதை தான் இப்போது தெரிந்து கொள்வோம்.

பஞ்சு போன்ற பாதம் அழகாக பெற செய்ய வேண்டியது:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து விட்டு அதில் உங்கள் பாதங்களை பத்து நிமிடம் வரை வைத்திருங்கள். அதன் பிறகு உங்கள் பாதங்களை சுத்தமான துணி வைத்து துடைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை செய்த பிறகு வீட்டில் ஸ்கிரப்பர் அல்லது உப்பு காகிதம் இரண்டில் ஏதேனும் ஒன்று வைத்து பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் எல்லாம் தேய்த்தால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி விடும். இதன் பிறகு தேங்காய் எண்ணெய் தேய்த்து பாதங்களை சின்னதாக ஒரு மசாஜ் செய்து கொடுங்கள். மசாஜ் செய்த பிறகு துணியை வைத்து பாதங்களில் இருக்கும் எண்ணெயை துடைத்து எடுத்து விடுங்கள்.

இதன் பிறகு மறுபடியும் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து அதில் மைல்டான ஷாம்புவை கொஞ்சம் கலந்து அதில் உங்கள் பாதங்களை மீண்டும் ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து இப்பொழுது ஸ்கிரப்பர் எதுவும் வைத்து தேய்க்காமல் நாம் ஏற்கனவே எலுமிச்சை பழத்தை பிழிந்த தோல் வைத்து உங்கள் பாதங்களில் நகம், வெடிப்பு உள்ள இடங்களில் எல்லாம் தேய்த்துக் கொடுங்கள்.

- Advertisement -

இதையெல்லாம் செய்த பிறகு பாதத்தை நன்றாக துடைத்து விட்டு மறுபடியும் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல் நகங்கள் பாதம் போன்றவற்றில் உள்ள மசாஜ் செய்த பிறகு அப்படியே உறங்க செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: அக்குள் கருமை நீங்க டிப்ஸ்

இதைத் தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் பாதம் குழந்தைகளின் பாதங்களை போல பட்டு போல தொட்டவுடன் பஞ்சு போல மிருதுவாக இருக்கும். இத்தனை செய்து பாத அழகை பெற வேண்டுமா என்றால் நம்முடைய ஆரோக்கியத்திற்காகவும் அழகுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கி கொள்ள தான் வேணும். இதை தினமும் செய்ய முடியவில்லை வாரத்தில் இரண்டு நாட்களாவது இதை செய்து விடுங்கள்.

- Advertisement -