வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற, பதவி உயர்வு கிடைக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

astro-perumal

ஒருவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு பதவி உயர்வு என்பது வேண்டும். பதவி உயர்வு பெறுவதன் மூலம் ஊதிய உயர்வும் பெறுகிறார்கள். இவை சரியாக அமைய அவர்களுடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 10-ஆம் இடமாக இருக்கும் தொழில் ஸ்தானம் வலிமையாக இருக்க வேண்டும். அதைப் பொறுத்தே ஒரு மனிதனுடைய பதவி உயர்வு என்பது அமைகிறது. வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, விசுவாசம், மற்றவருடன் பழகும் விதம் ஆகியவற்றையும் பொறுத்து தான் பதவியில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியும். இந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்? வணங்க வேண்டிய தெய்வங்கள் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

job

உங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்தவரை 7-ஆம் இடம் என்பது நீங்கள் வேலை செய்யும் இடத்தை குறிக்கும். அது போல் உங்களுடைய உயரதிகாரிகளை குறிப்பது 9-ஆம் இடமாக இருக்கிறது. உங்களுடைய புகழ் மற்றும் உயர்வு 11-ஆம் இடத்தை குறிக்கும். அவர் அவர்களுடைய தசாபுத்திக்கு ஏற்ப சாதகமான கிரக அமைப்பில் பதவி உயர்வு என்பது கிடைக்கப் பெறுகிறது. இவை சரியாக அமைய மேஷ ராசிக்காரர்கள் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். அது போல் மலை மீது அமைந்துள்ள முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவதும் வேண்டிய படி பதவி உயர்வு கிடைக்க செய்யும்.

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சிவபெருமானை பிரதோஷ நாட்களில் வழிபட்டு வர நல்ல ஒரு பலன் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு செய்வதும், நாராயணரின் தாயாரை திருப்பதியில் சென்று வணங்குவதும் நினைத்தபடி பதவி உயர்வு கிடைக்க செய்யும். அடிக்கடி அம்மன் கோவிலுக்கு சென்று உத்தியோக ரீதியான வேண்டுதல்களை வைத்தால் மேலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

sivan-temple

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் உங்களுடைய பதவி உயர்வுக்காக அருகிலிருக்கும் பெருமாள் சன்னிதிக்கு அடிக்கடி சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். கடக ராசிக்காரர்கள் மாரியம்மன், பார்வதி தேவி போன்ற தாயார்களை தனி சன்னிதியில் சென்று விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டிய படி பதவி உயர்வு என்பது விரைவாக கிடைக்கும்.

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்கள் உத்தியோக ரீதியான பதவி உயர்வு, பல்வேறு துறை ரீதியான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற அடிக்கடி சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலை அர்ச்சனை செய்து வர எதிர்பார்த்தபடியே நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கப் பெறும். தனுசு ராசிக்காரர்கள் மற்றும் மீன ராசிக்காரர்கள் அடிக்கடி குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.

thirupathi

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வர பதவி உயர்வு கிடைக்கும். மேலும் அவர்கள் துர்க்கை அம்மன், ஹனுமார், பிள்ளையார் போன்ற தெய்வங்களை வணங்கி வந்தாலும் பதவி உயர்வு கிடைப்பதில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி நல்ல ஒரு சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே
9 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கணவன்-மனைவிக்குள் வாழ்நாள் முழுவதும் பிரச்சனையே வராது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.