தலைக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை வைத்து வெறும் குச்சாக மாறிப் போன ரோஜா செடியை கூட கொத்து கொத்தாக பூக்க வைக்கலாம்.

- Advertisement -

வீட்டுத் தோட்டம் வைப்பவர்கள் மட்டும் இல்லாமல் ஆசைக்காக ஒன்று இரண்டு செடி வைப்பவர்கள் கூட கட்டாயமாக ஒரு ரோஜா செடியாவது வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு ரோஜா செடி அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதில் பூக்கள் பூத்து இருப்பதை பார்க்க மனதுக்கு அத்தனை இதமாக இருக்கும். அந்த செடி வதங்கி இலைகள் இல்லாமல் வெறும் குச்சி மட்டும் இருக்கும் நிலைக்கு போனால் கூட மறுபடியும் பழைய படி நிறைய பூக்கள் பூக்க வைக்க நாம் தலைக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருள் போதும். அது என்ன பொருள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

ரோஜா செடிகள் அத்தனை சீக்கிரத்தில் வாடி வதங்கி விடாது சரியான பராமரிப்பு இல்லாமல் போனால் தான் இப்படி ஆகும். இதற்கு போதுமான தண்ணீர், உரம் பற்றாமல் இருக்கும் அல்லது வேர் அழுகல் நோய் வந்து விட்டாலும் செடி இப்படி மாறி விடும். இந்த பிரச்சனைகளை சரி செய்து விட்டால் போதும் வாடிய செடிகள் கூட மறுபடியும் துளிர்த்து பூக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

அதற்கு முதலில் இப்படி வாடிய செடிகளில் உள்ள கிளைகளின் முனைகளை கத்திரிக்கோலால் நறுக்கி எடுத்து விடுங்கள். அதன் பிறகு நறுக்க இடத்தில் வேப்ப எண்ணையை வைத்து விடுங்கள். செடியை சுற்றிலும் உள்ள மண்ணை நன்றாக கிளறி மண் தளர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் ஒரு செடி பட்டு போனால் செய்ய வேண்டிய முதலுதவி போல தான்.

இப்போது இந்த செடிக்கு தேவையான அந்த மருந்தை தயார் செய்வோம். அதற்கு நன்றாக புளித்த மோர் அதாவது குறைந்தது ஒரு பத்து நாட்களாக புளிக்க வைக்க வேண்டும். புளிக்காத மோரை ஊற்றினால் அதுவே செடி அழுக காரணமாகி விடும். இதில் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் எந்த சீயக்காய் இருந்தாலும் பரவாயில்லை ஒரு டம்ளர் மோர்க்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு சீயக்காய் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது 24 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும் அடுத்து மறுபடியும் இதை கலந்து இந்த ஒரு டம்ளர் கரைச்சலுக்கு ஐந்து அல்லது ஆறு லிட்டர் அளவிற்கு தண்ணீர் கலந்து கொள்ளலாம். இப்படி கலந்த இந்த தண்ணீரை வாரம் இருமுறை வாடிய இந்த செடிக்கு ஊற்றி வந்தால் போதும், செடிகள் மறுபடியும் துளிர் விட்டு வளரும். மற்ற நாட்களில் சாதாரணமாக தண்ணீர் ஊற்றி வந்தால் போதுமானது இவற்றுடன் சாணிகுப்பை கம்போஸ்ட்டுடன் உரம் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முறையை பின்பற்றும் போது, இரண்டே வாரத்தில் உங்களின் வாடிய ரோஜா செடிகளில் புதிய துளிர்கள் வந்திருப்பதை காண முடியும். உங்கள் செடி வாடி இருந்தால் நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -