இனி உங்க பட்டுப் புடவையில் எந்த கறை படிந்தாலும் கவலையே பட வேண்டாம். இந்த ஒரு பொருள் இருந்தா போதும், பட்டுப் புடவையில் இருக்க கறை எல்லாத்தையும் பட்டுனு காணாம செஞ்சிடும்.

- Advertisement -

நம் பாரம்பரிய உடையான புடவையிலே பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இந்த பட்டு புடவைக்கு தான். பெண்கள் நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதிகமாகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கொடுப்பார்கள். அதிலும் கல்யாண பட்டு என்றால் அவர்கள் ஆயிசுக்கும் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பட்டுப் புடவையில் கறை படிந்து விட்டால், அதை சுத்தம் செய்வது பெரும் வேலை. அது மட்டும் இன்றி இதனால் புடவையும் பழையது போல மாறி விடும். இனி இது போன்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். நம் வீட்டிலேயே சுலபமாக அந்த கறைகளை நீக்கிவிடலாம். அதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் பட்டுப்புடவையை உடுத்தி வெளியே சென்று வந்த பிறகு அதை அப்படியே மடித்து பீரோவில் வைக்கக் கூடாது. புடவையை சிறிது நேரம் நிழலில் காற்றாட விட்டு, அதன் பிறகு ஒரு காட்டன் பையில் மடித்து வைத்து பீரோவில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இப்படி வைப்பதால் பட்டுப் புடவையின் சரிகைகள் கருத்துப் போகாமல் இருக்கும். அதே போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த பட்டுப்புடவையை பீரோவில் இருந்து வெளியே எடுத்து மடிப்பை வேறு புறமாக மாற்றி மடித்து வைக்க வேண்டும். அப்போது தான் மடிப்புகளில் புடவை கிழிந்து விடாமல் இருக்கும்.

- Advertisement -

முதலில் பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம். அதற்கு ஒரு பவுலில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மையில்டான ஷாம்பு கலந்து பட்டுப் புடவையில் கறைகள் இருக்கும் இடத்தை மட்டும், இந்த பவுலில் இருக்கும் தண்ணீரில் முக்கி எடுத்து லேசாக கசக்கினாலே போதும் கறை நீங்கி விடும். இதனால் ஓரிடத்தில் இருக்கும் சாயம் மற்ற இடத்திற்கு மாறாது அதே நேரத்தில் துணியில் உள்ள கறையும் மாறாமல் இருக்கும்.

அடுத்து பட்டுப் புடவையை பராமரிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சனை புடவையில் பட்டு விடும் எண்ணெய் கறை தான். அந்த கறைகளை போக்க கறை இருக்கும் இடத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை கொட்டி, ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். எண்ணெய் கறையை மொத்தமும் அந்த பவுடர் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு புடவையில் அந்த பவுடரின் கறை தெரியும். அதற்கு குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து பவுடர் கறை இருக்கும் இடத்தில் லேசாக துடைத்து விடுங்கள். காய்ந்த பிறகு புடவையில் எண்ணெய் கறையும் இருக்காது, பவுடர் கறையும் மறைந்து விடும்.

- Advertisement -

இப்போது கடைசியாக பட்டுப் புடவையில் விடாப்பிடியான கறைகள் இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கிளிசரின். பட்டுப்புடவையில் கறை இருக்கும் பகுதியின் அடியில் ஒரு வெள்ளை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறை இருக்கும் இடத்தில் மட்டும் இந்த கிளிசரனை பட்ஸ் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். கறை இருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கிளிசரினை தடவ வேண்டும். துடைக்கும் போதே கறைகள் வந்து விடும் மிகவும் அழுத்தி துடைக்க கூடாது. கறை மொத்தமும் வந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து கிளிசரின் வைத்து துடைத்து இடத்தில் துடைத்து விட வேண்டும். இதுவும் கண்டிப்பாக செய்ய வேண்டும். கிளிசரணை மட்டும் வைத்து துடைத்து விட்டு விட்டால் கிளிசரின் கம் போல இருக்கும் அது புடவையில் பிடித்துக் கொண்டு புடவை பார்க்க நன்றாக இருக்காது.

இந்த கிளிசரின் வைத்து துடைக்கும் முறையை மட்டும் கவனமாக செய்ய வேண்டும். இது அதிகமாகவும் சேர்த்து விடக் கூடாது அதே நேரத்தில் அதிகமாக சாயம் போக கூட புடவையில் இதை தேய்க்கும் முன்பு ஒரு முறை லேசாக தொட்டு பரிசோதித்து விட்டு அதன் பிறகு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த பொருளை வைத்து பூஜை பாத்திரங்களை பளிச்சுன்னு மாத்த முடியும்ன்னு சொன்ன சாத்தியமா யாரும் நம்பவே மாட்டிங்க. பாசி படித்த பூஜை பாத்திரங்கள் கூட தங்கம் போல ஜொலிக்கும் .

பட்டுப் புடவையில் படிந்த இந்த விடாப்பிடியான கறைகளை கூட இவ்வளவு சுலபமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுத்தம் செய்து விடலாம்.

- Advertisement -