இந்த பொருளை வைத்து பூஜை பாத்திரங்களை பளிச்சுன்னு மாத்த முடியும்ன்னு சொன்ன சாத்தியமா யாரும் நம்பவே மாட்டிங்க. பாசி படித்த பூஜை பாத்திரங்கள் கூட தங்கம் போல ஜொலிக்கும் .

pooja things
- Advertisement -

தினமும் வீட்டில் விளக்கேற்றுவது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம் தான். அப்படி ஏற்றும் விளக்கு நல்ல புதுசு போல பளீச்சின்னு ஜொலிச்சுக்கிட்டே இருந்த தான் அந்த தீபத்தோட ஒளியிலே இன்னும் பிரகாசமா, பார்க்க கண்ணுக்கு அழகா இருக்கும். இதை சொல்லும் போது நன்றாக தான் இருக்கும், கறை படிந்து எண்ணெய் பிசிக்குடன் இருக்கும் பூஜை பாத்திரங்களை தேச்சு எடுக்கறதுக்குள்ள ரொம்ப கஷ்டமா இருக்கும். எவ்வளவு அழுக்கு, எண்ணெய் கறை படிந்த பூஜை பாத்திரங்களாக இருந்தாலும், இந்த ஒரு பொருளை வைத்து சுத்தம் செஞ்சிட முடியும். அதை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு அதிலிருக்கும் எண்ணெய்களை எல்லாம் எடுத்து விட்டு, டிஷ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பர் இரண்டில் எதையாவது ஒன்றை வைத்து சுத்தமாக துடைத்து கொள்ளுங்கள் அப்போது தான் தேய்க்க சுலபமாக இருக்கும்.

- Advertisement -

அடுத்ததாக இந்த பூஜை பாத்திரங்களை தேய்க்க இந்த பேஸ்ட்டை தயார் செய்து கொள்வோம். இது புதுமையான விஷயம் எதுவும் இல்லை நம் வீட்டுப் பெரியவர்கள் அந்தக் காலத்தில் இருந்து செய்து வரும் முறை தான். புளியை கொஞ்சமாக எடுத்து நன்றாக ஊற வைத்துக் கரைத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் உப்பு, கோலமாவு, இவைகளை சேர்த்த பிறகு அரை எலுமிச்சம் பழத்தின் சாறை இதில் கலந்து கொள்ளுங்கள். இதன் அளவை உங்கள் வீட்டில் பூஜை பாத்திரங்களை பொறுத்து கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது துடைத்து வைத்த பூஜை பாத்திரங்களின் மேல் இந்த பேஸ்ட்டை தேய்த்துக் விடுங்கள். இப்போது பூஜை பாத்திரங்களை பளிச்சிட செய்யும் அந்த ஒரு பொருள் பயன்படுத்துவோம், அது வேறொன்றுமில்லை உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கை வைத்து விளக்கு தேய்ப்பதா என்று ஆச்சரியப்படலாம், ஆனால் இதில் இருக்கும் அந்த ஸ்டார்ச் சத்து பித்தளை பொருட்களை நல்ல வெண்மையாக மாற்றி விடும் தன்மை கொண்டது. புளி பேஸ்ட் தேய்த்து வைத்த பூஜை பொருட்கள் மீது இந்த உருளைக்கிழங்கை லேசாக தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு சபீனா வைத்து தேய்த்துக் லேசாக தேய்த்தால் போதும் பூஜை பாத்திரங்கள் புதுசு போல மாறி விடும். பூஜை பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக தான் இந்த சபீனா. இதற்கு பதில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கூட பயன்படுத்தலாம்.

இந்த பூஜை பாத்திரங்களை எப்போது தேய்த்தாலும் உடனே ஈரம் இல்லாமல் சுத்தமாக துடைத்து வெயிலில் காய வைத்து எடுத்தால் சீக்கிரம் கருத்துப் போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த மார்கழியில் உங்க வீட்டு வண்ணக்கோலம் தான், பாக்குறவங்க கண்ணை எல்லாம் பறிக்கிற அளவுக்கு பளிச்சுன்னு இருக்கும். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு இந்த மார்கழிக்கு வண்ண கோலங்கள் போட்டு அசத்திடலாம்.

இந்த வீட்டு குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்வது குறித்து தெரிந்து கொண்ட, இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள்.

- Advertisement -