பருக்கள் நீங்கி முகப்பொலிவு பெற பாகற்காய் ஃபேஸ் பேக்! பாகற்காயில் இருக்கும் கசப்பு உள்ளுறுப்புகளை மட்டுமல்லாமல், சருமத்திற்கும் எப்படி பயன்படும் தெரியுமா?

pavakkai-face-pack
- Advertisement -

காய்கறி வகைகளில் அதிகம் வெறுக்கப்படும் இந்த பாகற்காய் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனால் உடல் உள்ளுறுப்புகள் மட்டுமல்லாமல், சருமத்துக்கும் நல்ல ஒரு பராமரிப்பு கொடுக்கிறது. பல வகையான காய்கறி ஃபேஸ் பேக்குகள் இருக்கும் பொழுது, இந்த பாகற்காயின் சிறப்பு என்ன? பாகற்காய் ஃபேஸ் பேக் எப்படி போடுவது? என்பது போன்ற அழகு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பாகற்காய் உடலுக்கு உள்ளே சென்று ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதனால் உணவாக எடுத்துக் கொண்டாலும் சருமத்திற்கு நல்ல ஒரு பராமரிப்பை கொடுக்கும். ஆனால் பலரும் இதன் கசப்புத் தன்மை காரணமாக பாகற்காயை தவிர்த்து விடுகிறார்கள். எனவே இத்தகையவர்கள் பாகற்காயில் இருக்கும் சத்துக்களை சருமத்திற்கு கொடுக்க ஃபேஸ் பேக் போல பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -

முதலாவதாக கருமையான கருந்திட்டுக்கள், முகப் பருக்கள் அதிகம் இருப்பவர்கள் ஒரு பாகற்காயை கழுவி மிக்ஸி ஜாரில் துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு வேப்பிலை, கற்றாழையில் இருக்கும் ஜெல் போன்ற சதைப்பகுதி சிறிதளவு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகம், கழுத்து, கை, கால்கள் ஆகிய இடங்களில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரினால் அலம்பி கொள்ளலாம். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு வந்தால் நம்முடைய முகமா இது? என்று நாமே ஆச்சரியப்பட்டு போய்விடுவோம். அந்த அளவிற்கு நல்ல ரிசல்ட் கொடுக்கக் கூடிய இந்த பாகற்காய் ஃபேஸ் பேக் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இரண்டாவதாக அதிகப்படியான எண்ணெய் சருமம் கொண்டவர்கள் பாகற்காயை துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள் அதனுடன் காய்ந்த ஆரஞ்சு பழத்தின் தோல் சிறிதளவு சேர்த்து கூழாக்கி, அதனுடன் தேவையான அளவிற்கு கடலைமாவு சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இதை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பினால் முகம் மாசு, மருவற்ற முகமாக பிரகாசிக்க துவங்கும். கடலை மாவுக்கு பதிலாக முல்தானிமட்டி பவுடரையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி எப்போதும் சருமம் ஆரோக்கியமாக இருக்க ஒரு மிக்ஸி ஜாரில் பாகற்காயை துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், நான்கைந்து வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்து நைஸாக அரைத்து பேஸ்ட் போல செய்து முகம் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் எத்தகைய சரும பிரச்சனைகளும் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும்.

கரும்புள்ளி, வெண்புள்ளிகள், கருந்திட்டுக்கள், கருவளையம், முகப் பருக்கள், தழும்புகள், எண்ணைப்பசை, வறண்ட சருமம் என்று எல்லா வகையான சரும ரீதியான பிரச்சனைகளையும் போக்கும் அற்புதமான இந்த பாகற்காய் ஃபேஸ் பேக்குகளை நீங்களும் உங்களுக்கு பிடித்தவாறு பயன்படுத்திப் பாருங்கள். ஒரே மாதத்தில் உங்களுக்கு ஆச்சரியப்படும் பலன் கிடைக்கும்.

- Advertisement -