கல்யாண வீட்டு ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் குழம்பு எப்படி செய்யலாம் தெரியுமா?

pagarkai
- Advertisement -

பாகற்காய் என்றாலே பெரும்பாலும் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் பாகற்காயில் மருத்துவ பலன்கள் அதிகம் உள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பாகற்காயை சமையலில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது. உடலில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. இவ்வாறு பலன்கள் தரக்கூடிய பாகற்காயை ஏதேனும் ஒரு வகையிலாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஆந்திரா ஸ்டைலில் ஒரு முறை இந்த பாகற்காய் குழம்பை வைத்து பாருங்கள். கல்யாண வீட்டு வத்த குழம்பு சுவையிலேயே அட்டகாசமாக இருக்கும். இதனை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

pavakkai

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 5, வரமிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, தனியா – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், எள்ளு – கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, இஞ்சி விழுது – அரை ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்து, 20 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை தண்ணீர் சேர்த்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

tomato

பிறகு தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் அதில் வரமிளகாய், தனியா, சீரகம் மற்றும் எள் சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அவற்றை ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அறிந்து வைத்துள்ள பாகற்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

onion

இவை நன்றாக வதங்கியதும் இவற்றுடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டு, பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறினை இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பின் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா பொடியுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விட வேண்டும். இறுதியாக நாட்டுச்சர்க்கரை மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விட்டால் சுவையான பாகற்காய் புளிக்குழம்பு தயாராகிவிடும்.

puli2

இவ்வாறு மசாலாவுடன் சேர்த்து இந்த பாகற்காய் குழம்பினை உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்கள். இதனை ஒருமுறை சுவைத்து விட்டால் இனி பாகற்காய் வேண்டாம் என்று எவரும் சொல்ல மாட்டார்கள்.

- Advertisement -