7 ஜென்ம பாவங்களும் தீர்ந்து வறுமை இல்லாமல் சுகபோக வாழ்வு வாழ வீட்டிற்கு அரிசி வாங்கியவுடன் முதலில் இப்படி செய்யுங்கள்!

annapoorani-rice
- Advertisement -

ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான உணவு இறைவனுக்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் தான் உணவை வீணாக்கினால் பெரும் பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவருடைய போராட்டமாக இருந்து வருகிறது. இந்த வகையில் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களை கூட நீக்கும் ஆற்றல் இந்த எளிய பரிகாரத்திற்கு உண்டு. சுகபோக வாழ்வு பெற, அத்துணை பாவங்கள் நீங்க நாம் வீட்டிற்கு அரிசி வாங்கி வந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதனை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

anna-poorani

ஒவ்வொருவருக்கும் கர்ம வினைப்படி, தான் செய்த பாவங்களுக்கும், புண்ணியங்களுக்கு ஏற்ப தன் வாழ்வு அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதையே ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இப்படி நாம் செய்யும் பாவங்களுக்கும், புண்ணியங்களுக்கும் அந்த ஜென்மத்தில் மட்டுமல்லாமல் ஏழேழு ஜென்மமும் தொடரும் என்கிறது சாஸ்திரம். இதிலும் நீங்கள் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல், உங்கள் பெற்றோர்கள், முன்னோர்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வந்து சேருமாம்.

- Advertisement -

இப்படி எல்லா பாவங்களுக்கான தண்டனையாக தான் பல்வேறு சோதனைகளுக்கு இறைவனால் நாம் அனுதின வாழ்வில் உள்ளாக்கப் படுகிறோம். இவற்றை கடந்து வர இறை வழிபாடு கட்டாயம் அவசியம். இறைவனை மனதார, மனமுருகி உண்மையிலேயே தொழுபவர்களுக்கு நிச்சயம் அவருடைய தரிசனம் உங்களுடைய ஆழ்மனதில் கிடைக்கப் பெறும். இப்படி நாம் செய்யும் பாவங்களுக்கு உரிய தண்டனைகளை குறைத்துக் கொள்ளவும், நம்மைப் பின் தொடரும் ஏழு ஜென்ம பாவங்களை நீக்கவும் செய்யக் கூடிய அற்புதமான எளிய பரிகாரம் தான் இது.

basmati-rice

நீங்கள் எப்பொழுதும் வீட்டில் அரிசியை குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாதம் வடித்து சாப்பிட்டு முடித்த பின்னர் கூட அந்த பாத்திரத்தில் இருக்கும் மொத்த சாதத்தையும் வழித்து எடுக்க கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். சாதத்தை வழித்து எடுத்தால் குடும்பத்தில் வறுமை வந்து விடும் என்பது நம் முன்னோர்கள் கருத்து. ஒரு கைப்பிடி சாதம் ஆவது இரவு நாம் தூங்கும் பொழுது நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும். அப்படி இருக்க அரிசியில் கூட இதே விஷயத்தை தான் நாம் கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -

அரிசி சுத்தமாக வழித்து துடைத்து எடுக்க கூடாது. கடைசி ஒரு ஆழாக்கு அரிசி ஆவது விட்டு விட்டு நீங்கள் புது அரிசியை வாங்கி வந்து உங்கள் பாத்திரத்தில் கொட்டி கொள்ள வேண்டும். எப்பொழுதும் மூட்டை மூட்டையாக வீட்டில் அரிசி இருந்தால் அன்னபூரணி நிரந்தரமாக நம் வீட்டில் வாசம் செய்வாள். இதனால் நம்முடைய வாழ்வில் வறுமை என்பதே ஏற்படாமல் இருக்கும். மூட்டையாக அரிசி வாங்கும் பொழுது அதிலிருந்து ஒரு ஆழாக்கு அரிசியை மட்டும் எடுத்து முதலில் அன்னபூரணிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

rice

பூஜை அறையில் கட்டாயம் அன்னபூரணியின் படம் இருப்பது நல்லது. அந்த அன்னபூரணிக்கு அரிசியை செலுத்தி விட்டு பின்னர் நீங்கள் அந்த புது அரிசியில் உணவு சமைக்க தொடங்கலாம். இப்படி ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக வாங்கும் அரிசியை இது போல் அன்னபூரணிக்கு படைக்க வேண்டும். படைத்த இந்த அரிசியை தனியாக ஒரு கலத்தில் சேகரித்து வாருங்கள். ஓரளவுக்கு சேகரித்ததும் அந்த அரிசியை கொண்டு உணவு சமைத்து நீங்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி செய்து வர நிச்சயம் உங்களுடைய ஏழேலு ஜென்ம பாவங்களும் நீங்கி வறுமை இல்லாத சுகபோக வாழ்வு பெறுவீர்கள்.

- Advertisement -